ஈரோடு தேர்தல் பிரசாரத்திற்கு எப்போ போவீங்க?.. வந்து விழுந்த கேள்வி.. ஒரே வார்த்தையில் ஓபிஎஸ் பதில்
ஈரோடு தேர்தல் பிரசாரத்திற்கு எப்போ போவீங்க என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம் ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 நாட்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, ஈரோடு தேர்தல் பிராசாரத்திற்கு எப்போது செல்வீர்கள் என்று ஓபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27 ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
அதிமுகவில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் என்பவரும் தேமுதிக தரப்பில் ஆனந்த் என்பவரும் போடியிடுகின்றனர்.

எடப்பாடி அணிக்கு சாதகமாக
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டு குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து பின்வாங்கினார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். தேர்தல் பணிக்குழுவும் அமைத்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுகாக இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமாக சென்றது.

தீவிர தேர்தல் பிரச்சாரம்
இதையடுத்து ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக பிரசாரம் செய்ய இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினர் முகாமிட்டு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2 தினங்களாக ஈரோட்டில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அதேபால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் முகாமிட்டு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது அங்கு தேர்தல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது.

பிரசாரம் செய்வாரா? இல்லையா?
எங்கு பார்த்தாலும் திருவிழா போல கூட்டம் கூட்டமாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதை காண முடிகிறது. அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்றுத்தான் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். எனினும், தேர்தலில் ஓபிஎஸ் பிரசாரம் செய்வாரா? இல்லையா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் அவர் தரப்பில் இருந்து உறுதியாக தற்போது வரை எதுவும் வெளியாகவில்லை.

பிரசாரத்திற்கு எப்போ போவீங்க.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு எப்போ போவீங்க... என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒற்றை வரியில் மட்டும் "உங்க கிட்ட சொல்லிட்டுத்தான் போவேன்" என்று பதிலளித்து விட்டு வேறு எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் வணக்கம் செலுத்திய படி காரில் ஏறி சென்று விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications