ஈரோட்டில் 20 பணிமனைகளுக்கு சீல்! போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்! என்ன காரணம்
ஈரோடு கிழக்கில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்சிகளின் பணிமனைகளுக்குச் சீல் வைத்தனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிகாரிகள், இன்று மட்டும் சுமார் 20 தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. அங்கு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு
கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியே களமிறங்கியது. இதனால், இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டது. இடைத்தேர்தலில் வென்ற தீர வேண்டும் என்பதால் மூத்த அமைச்சர்கள் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அங்குக் காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்

கடும் போட்டி
அதேபோல அதிமுக சார்பில் இதில் தென்னரசு களமிறங்குகிறார். முதலில் ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் அங்குக் குழப்பம் ஏற்பட்டது. இருவர் இரட்டை இலை கோரி விண்ணப்பிக்கும் சூழல் உருவானதால், சின்னமே முடங்கும் என்று கூறப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார். இதில் அமமுகவும் போட்டியிடாத நிலையில், இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

புகார்கள்
மேலும், இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார்.. இவர்களைத் தவிர தேமுதிக வேட்பாளரும் களத்தில் உள்ளார். மேலும், பல சிறு கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் மொத்தம் ஈரோடு கிழக்கில் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 77ஆக உள்ளது.. இதற்கிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் அளிக்கப்பட்டன.

20 பணிமனைகளுக்குச் சீல்
இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆய்வு செய்த அதிகாரிகள், அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இப்படி அனுமதியில்லாமல் செயல்பட்ட சுமார் 20 தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடவடிக்கை தொடரும்
முன்னதாக நேற்றைய தினமும் இதேபோல ஆய்வு செய்த அதிகாரிகள் சுமார் 10க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைத்தனர். குறிப்பாக திமுக பணிமனைகள் 10 மற்றும் அதிமுக பணிமனைகள் 4 சீல் வைக்கப்பட்டது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்த நிலையில், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உதவியுடன் சீல் வைக்கப்பட்டது. வரும் நாட்களிலும் அனுமதியில்லாமல் செயல்படும் தேர்தல் பணிமனைகள் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அங்கு ஏற்கனவே பாதுகாப்பிற்குத் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப். 27ஆம் தேதி நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடன் ஈரோடு கிழக்கிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஈரோடு கிழக்கில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications