"அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்".. கதறிய மனைவியை தேற்றும் கணவர்.. வைரலாகும் வீடியோ
குழந்தையை விற்பது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
ஈரோடு: "அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்" என்று கணவர் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில், சட்டவிரோத குழந்தை விற்பனையில் ஈடுபடும் கும்பல் ஒன்று, வளர்த்த தம்பதியிடம் இருந்து குழந்தையை மீண்டும் வாங்கி செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிதான் பதிவாகி உள்ளது.
மதுரையை சேர்ந்த ஒரு இளம் தம்பதிக்கு குழந்தை இல்லை. அதனால் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் எழுந்துள்ளது.
குடும்பத்தாரை சமாளிக்க உறவினர் ஒருவர் உதவியுடன் பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்க தம்பதி முடிவு செய்தனர்.

இளம்தம்பதி
அதன்படி புரோக்கர்கள் கணேஷ்-ரேவதி தம்பதி மூலமாக ஒரு குழந்தை விலைக்கு இருப்பதாகவும், அதற்கு விலை நான்கரை லட்சம் என்றும் சொல்லப்பட்டது. வேறு வழி இல்லாமல் அந்த குழந்தையை இளம்தம்பதி விலைக்கு வாங்கினர்.

தம்பதி
ஆனால் அந்த புரோக்கர் தம்பதி மேலும் பணத்தை கறந்தனர். குழந்தை கிடைத்த சந்தோஷத்தில் பணத்தை பெரிதாக இவர்கள் நினைக்கவில்லை. அதனால் எவ்வளவு பணத்தையும் தர தயாராக இருந்தனர். அந்த நேரத்தில்தான், ஆனால் குழந்தையை தாயாரிடம் காட்ட வேண்டும் என்று கூறி புரோக்கர் தம்பதி சொன்னார்கள்.

வீடியோ
அதன்படி ஒரு தனியார் விடுதிக்கு இளம்தம்பதி வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் புரோக்கர் தம்பதி குழந்தையை திரும்ப பெற்று கொள்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகிறது. வீடியோவில் குழந்தையை பிரிய மனமில்லாமல் அந்த இளம்பெண் அழுகிறார். "கொஞ்ச நேரத்துல குழந்தை திரும்ப வந்துடும்" என்று அவருக்கு கணவர் ஆறுதல் சொல்கிறார்.

குழந்தை
குழந்தையை வாங்கி கொண்டு போனவர்கள், கடைசிவரை திரும்ப வரவேயில்லை. நான்கரை லட்சம் பணமும்போய், குழந்தையும் போனது. இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது. புரோக்கர் கணேஷ் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இப்படித்தான் விற்பது போல விற்று நடித்ததும், பணத்தை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications