ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.1 -க்கு மூன்று வேளையும் உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் இதயத்தை நனைத்த ஈரோடு தம்பதியின் ஈரமனது!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு 3 வேளையும் ரூ.1-க்கு உணவு வழங்கி வரும் தம்பதி குறித்த தகவல் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது என அந்த தம்பதியை பாராட்டி பெருமைப் படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

கல் குவாரி அனுமதியை ரத்து செய்க! தனி ஒருவனாக 2 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் விவசாயி!கல் குவாரி அனுமதியை ரத்து செய்க! தனி ஒருவனாக 2 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் விவசாயி!

ஈரோடு அரசு மருத்துவமனை

ஈரோடு அரசு மருத்துவமனை

ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையர் சைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். மதியச் சாப்பாடு ஒன்று 70 ரூபாய்க்கு விற்று வரும் இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதில் 20% தள்ளுபடி செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு மட்டும் மூன்று வேளையும் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி தங்களது தன்னலமற்ற சேவையை தொடர்கின்றனர்.

40 பேர் முதல் 50

40 பேர் முதல் 50

நாளொன்றுக்கு 40 சாப்பாடு முதல் 50 சாப்பாடு வரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அட்டெண்டராக வந்திருப்பவர்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் வழங்கி வருகிறார்கள் வெங்கட்ராமன் -ராஜலட்சுமி இணையர். இதேபோல் காலை, இரவு நேரங்களிலும் ஒரு ரூபாய்க்கு சிற்றூண்டி வழங்கி ஏழை எளிய மக்களின் பசியாற்றுகிறார்கள். ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கிராமப்புற ஏழை எளியோர் மனதார அந்த தம்பதியை வாழ்த்திச் செல்கின்றனர்.

முதல்வரின் கவனத்திற்கு

முதல்வரின் கவனத்திற்கு

ஈரோடு தம்பதியின் இந்த தொண்டு குறித்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் அவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் நேரில் பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

 முதலமைச்சர் பாராட்டு

முதலமைச்சர் பாராட்டு

"மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!''. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.

English summary
Erode one rupee food:ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு 3 வேளையும் ரூ.1-க்கு உணவு வழங்கி வரும் தம்பதி குறித்த தகவல் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X