ஷர்மிளாவுடன்.. டூயட் பாடிய உமர்.. 300 வீடியோக்கள்.. இப்ப சார் உள்ளே ரெஸ்ட் எடுக்கிறார்!
டிக்டாக்கில் பழகிய பெண்ணை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்
ஈரோடு: கிட்டத்தட்ட 300 வீடியோக்கள்.. எல்லாமே டூயட் பாட்டுதான்.. ஷர்மிளாவுடன் ஜோடி சேர்ந்து டிக்டாக் வீடியோ பதிவிட்ட காதல் மன்னன் உமரை போலீசார் தூக்கி ஜெயிலில் உட்கார வைத்துள்ளனர்!
Recommended Video
ஈரோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (எ) ஹைருண்ணிசா... கணவரை பிரிந்து வாழ்பவர்.. 2 குழந்தைகள் உள்ளனர்.. தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வந்தார்.. ஆன்லைன் வியாபாரம் செய்து வருகிறார்.
ஒருபக்கம் பிசினஸ் இருந்தாலும் இன்னொரு பக்கம் டிக்டாக் ஆசை உள்ளது.. அடிக்கடி டிக் டாக் வீடியோ பதிவுகளை போட்டு வந்துள்ளார். ஆண்களுடன் டூயட் பாடலுக்கு ஒன்றாக நடித்து வீடியோ போட்டுள்ளார்.. அப்போதுதான் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த உமர் செரீப் என்பவர் பழக்கமானார்.

உமர்
உமர் ஒரு டிரைவர்.. மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.. ஆனால் டிக் டாக்கில் தம்பிகண்ணு என்ற பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளார்.. காதல் ரசம் சொட்டும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். எப்படியும் 300 வீடியோக்கள் இருக்குமாம்.. அதனால்தான் உமரை 5600-பேர் பாலோ செய்தும் வருகின்றனர். அப்படி போய் சிக்கியவர்தான் ஷர்மிளா.

டூயட் பாடல்கள்
ஷர்மிளா - உமர் இருவருமே செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொண்டனர்.. கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்வதை ஷர்மிளா உமரிடம் சொல்லி உள்ளார்.. ஆனால் உமர், தன்னுடைய மனைவி, 2 குழந்தைகள் விஷயத்தையே ஷர்மிளாவிடம் மறைத்து விட்டார்.. அத்துடன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்றும் ஷர்மிளாவை நம்ப வைத்துள்ளார்.

கல்யாணம்
உடனே ஷர்மிளாவுக்கு உமர் மீது பரிதாபம் வந்துவிட்டது. நெருங்கி பழகினர்.. 8 மாதங்களாக கல்யாணமும் செய்து கொள்ளாமல் உறவில் இருந்துள்ளனர்.. ஷர்மிளாவிடம் 10-பவுன் தங்க நகையும் 20-ஆயிரம் ரொக்கபணமும் உமர் ஒருமுறை பெற்றுள்ளார். இதனிடையே கல்யாணம் செய்து கொள்ளும்படி ஷர்மிளா கேட்டு கொண்டே இருந்திருக்கிறார்.. ஆனால் உமர் மறுத்து வந்துள்ளார்.

நடவடிக்கை
ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்து வாங்கிய நகை, பணத்தை ஷர்மிளா திரும்ப கேட்டபோது, அவரை மிரட்டி உள்ளார் உமர்... பணம், நகை பத்தி பேச்சை எடுத்தால், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டி உள்ளார். ஆரம்பத்தில் இருந்த பேச்சு, நடவடிக்கைகள் இப்போது உமரிடம் இல்லை.. இதனால் சந்தேகமடைந்த ஷர்மிளா ஒருநாள் உமரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

கைது
அப்போதுதான் ஏகப்பட்ட பெயரில் போலி அக்கவுண்ட்டுகளை உமர் வைத்திருந்தது தெரியவந்தது.. இதை பார்த்து அதிர்ந்த ஷர்மிளா கதறி அழுதார்.. தன்னை போல இனி எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று ஷர்மிளா ஈரோடு நகர ஸ்டேஷனில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் உமர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. இப்போது இந்த ரோமியோ கம்பி எண்ணி கொண்டுள்ளார்!
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications