Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கில் திமுக-நாம் தமிழர் கடும் மோதல்..கல்வீச்சில் உடைந்த மண்டைகள்..போலீஸ் தடியடி-பதற்றம்

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரம் செய்து பேச இருந்தார். இந்த வேளையில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருகட்சியினரும் கற்கள், கொடிகள் கட்டிய கம்புகளை தூக்கி வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி, திமுகவினர், போலீசார் என பலரது மண்டை உடைந்து ரத்தகாயம் அடைந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியில் மட்டும் 7 பேர் மோசமான நிலையில் சிகிச்சையில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தொகுதியில் போட்டியிடும் 77 பேரும் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக-நாம் தமிழர் வாக்குவாதம்

திமுக-நாம் தமிழர் வாக்குவாதம்

இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். புதன்கிழமை இரவு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சீமான் பிரசாரம் செய்தார். மேடையில் சீமான் பேச தயாராக இருந்தார். இந்த வேளையில் வீரப்பன்சத்திரம் பகுதியில் திடீரென்று நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருகட்சியினரும் பயங்கர மோதல்

இருகட்சியினரும் பயங்கர மோதல்

இந்த வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறியது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி தொடங்கினர். மேலும் கற்களும் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்ட கம்புகளை எடுத்து இருகட்சியினரும் மாற்றி மாற்றி பரஸ்பரம் வீச தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட சிலரது மண்டைகள் உடைந்தன. இதையடுத்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 போலீஸ் தடியடி

போலீஸ் தடியடி

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக இருதரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர். அமைதி காத்து அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்தினர். இதனால் இருகட்சியினரும் சிதறி ஓடினார்கள். இந்த வேளையில் போலீசார் சிலரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் 7 பேர்

நாம் தமிழர் கட்சியில் 7 பேர்

இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியில் 7 பேர் தலை உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛திமுகவினர் இன்று நடந்து கொண்டது மிக மிக கேவலமானது. நாம்தமிழர் கட்சியினர் 7 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என வருத்தத்துடன் கூறியுள்ளார். இதுதவிர திமுகவிலும் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2வது முறையாக மோதல்

2வது முறையாக மோதல்

ஏற்கனவே கடந்த 17 ம் தேதி ஈரோடு ராஜாஜிபுரத்தில் நாம் தமிழர், திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அன்பு தென்னரசுவின் மண்டை உடைந்தது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தான் தற்போது 2வது முறையாக இருகட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் வீரப்பன்சத்திரம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+