எதிர்பார்த்த மாதிரி இல்லையே.. தேர்தல் களமே மாறிடுச்சே! ஈரோடு கிழக்கு.. ரெடியான அதிமுக.. அப்போ திமுக?
ஓபிஎஸ் தற்போது இரட்டை இலை சின்னத்திற்காக பிரச்சாரம் செய்ய போகிறார். எதிர் தரப்பில் பாஜகவும் எடப்பாடி தரப்பிற்கு பிரச்சாரம் செய்ய உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை விட போட்டி கடினமாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் தொடக்கத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக இருந்தது. இவர்கள் கூட்டணியை எதிர்க்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறும் நிலைதான் காணப்பட்டது. முக்கியமாக அதிமுகவும் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருந்தது.

குழப்பம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாஜக வேட்பாளரை அறிவிக்க முயன்றது. இதற்காக தேர்தல் பணிக்குழுவை கூட பாஜக அமைத்தது. அதன்பின் ஓ பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவிப்பதாக கூறினார். இல்லையென்றால் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று கூறியது. இன்னொரு பக்கம் அமமுக தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தது. அதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதில் உறுதியாக இருந்தது. அதாவது கண்டிப்பாக நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று கூறியது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அப்படியே பிரியும் நிலை ஏற்பட்டது

வேட்பாளர்கள்
அதன்படியே ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் அறிவிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக கே.எஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டார். பாஜக மட்டும் யாரையும் அறிவிக்காமல் இருந்தது. இன்னொரு பக்கம் அமமுக தரப்பும் வேட்பாளரை நிறுத்தியது. இது போக தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் வேட்பாளரை அறிவித்தது. இதனால் தானாக எதிர்க்கட்சி வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கவுண்டர் வேட்பளாரை நிறுத்தியது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு செங்குத்த முதலியார் வேட்பாளரை நிறுத்தியது. அமமுக தரப்பும் செங்குந்த முதலியார் வேட்பாளரை நிறுத்தியது. இது திமுக - காங்கிரஸ் தரப்பிற்கு சாதகமாக மாறியது.

திமுக காங்கிரஸ்
தற்போது ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

எதிரணி
இது போக ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்துள்ளது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. பாஜகவும் கூட அதிமுகவின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக போட்டி இல்லை
ஓபிஎஸ் தற்போது இரட்டை இலை சின்னத்திற்காக பிரச்சாரம் செய்ய போகிறார். எதிர் தரப்பில் பாஜகவும் எடப்பாடி தரப்பிற்கு பிரச்சாரம் செய்ய உள்ளது. அமமுகவும் போட்டியிட உள்ளது. இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பல முனை போட்டியில் இருந்து 4 முனை போட்டியாக மாறி உள்ளது. காங்கிரஸ் - அதிமுக - தேமுதிக - நாம் தமிழர் இடையிலான போட்டியாக இது மாறி உள்ளது. இதில் அமமுக, நாம் தமிழர் இரண்டும் சேர்த்து அதிகபட்சம் 8 - 10 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெற வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மீதம் உள்ள 90 சதவிகித வாக்குகளுக்கு கடும் போட்டி நிலவி போகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரிய இருந்த வாக்குகளில் தற்போது ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது. ஓபிஎஸ், பாஜக, அமமுக மூலம் பிரிய இருந்த வாக்குகள் எல்லாம் மீண்டும் எடப்பாடி கேம்பிற்கு வந்துள்ளது.

தேர்தல்
இதனால்தான் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. தேர்தல் தொடங்கிய போது இருந்த நிலை இப்போது இல்லை. இப்போது களத்தில் அதிமுகவின் பலம் கொஞ்சம் அதிகம் ஆகி உள்ளது. ஈரோடு மாவட்டம் அதிமுக வலிமையாக இருக்கும் மாவட்டம் என்பதால் இந்த மாற்றம் அந்த கட்சிக்கும் சாதகமாக இருக்கும். ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இப்படி இருக்க எதிர்க்கட்சியில் பிரிய இருந்த வாக்குகள் மீண்டும் ஒன்று சேர்ந்து இருப்பதால் தேர்தல் களம் திமுகவிற்கு முழு சாதகமாக இல்லாமல் கடும் போட்டி உள்ள இடமாக மாறி உள்ளது. முன்பு திமுக கூட்டனி எளிதாக ஜெயிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் களம் அவ்வளவு எளிமையாக இருக்காது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
-
DGP, லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமை செயலாளர், கமிஷனர்! மொத்தமாக கண்ட்ரோல் எடுத்த டெல்லி! எடப்பாடி குஷி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications