மாநில கட்சியாக அங்கீகாரம்.. ஈரோட்டில் மாஸ் காட்டுமா நாம் தமிழர்? சீமானுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகம்m பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் போட்டியிடும் நிலையில் இருமுனைப் போட்டி உருவாகி இருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே கிடைத்த வாக்கு சதவீதத்தை விட மேல கூடுதலாக வாக்கு சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் உற்சாகத்தில் உள்ளனர் அந்த கட்சியினர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:
அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரகுமார் போட்டி:
பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.
அதிமுக புறக்கணிப்பு:
மேலும் தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் போட்டி இல்லை என விலகிக் கொண்டுள்ளது. இதனால் திமுக வேட்பாளரின் வெற்றி பிரகாசமாகி இருக்கிறது. அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில் நாம் தமிழர் கட்சி நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகி உள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் பத்தாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார்.
வாக்கு சதவீதம்:
இந்த நிலையில் மாநில கட்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது. அதிமுக பாஜக மற்றும் திமுக அதிருப்தி வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைக்கும் நிலையில் குறைந்தது 50,000 வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். கடந்த தேர்தலில் 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்காத நிலையில் தற்போது 20 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்கு கிடைக்கும் என்கின்றனர். இதனால் தமிழகத்தின் பிரதான கட்சி அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பிடிக்கும் என உறுதியாக சொல்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications