ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: திமுக இப்பவே அராஜகத்தை ஆரம்பிச்சுட்டாங்க.. நாதக சீதாலட்சுமி பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்ய நாம் தமிழர் கட்சியினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததாகவும், திமுகவினர் தற்போதே அராஜகத்தை தொடங்கி விட்டதாக குற்றம் சாட்டுகிறார் சீதாலட்சுமி.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

erode east by election ntk dmk

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளராக சந்திரகுமாரை அறிவித்திருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது வரை ஈரோட்டு கிழக்கு இடைத்தொகுதியில் ஒன்பது சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்யலாம் என நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் போலீசார் அனுமதிக்க முடியாது என கூறிவிட்டார்கள்.

திமுகவினர் தற்போதைய அராஜகம் செய்து வருகின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திமுகவின் அடக்கு முறையை மீறி சீமான் தலைமையில் சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்வோம். வாக்காளர்களை சந்தித்து நீதி கேட்போம். எங்களை ஆதரித்து திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பதாக சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் சீதாலட்சுமி தலைமையில் திரண்டார்கள். அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். இதை அடுத்து சீதாலட்சுமி மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

தொடர்ந்து கார் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஐந்து பேர் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். வெறும் பதாகைகளை கையில் வைத்திருந்ததை பிரச்சாரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்ததாக நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+