ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் விளங்காது- ஈரோடு பிரசாரத்தில் வெளுத்த ப.சிதம்பரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார் ப.சிதம்பரம்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடும் விளங்காது; அதேபோல பாஜக புகுந்த மாநிலமும் விளங்காது என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதாவது: தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக ஈவிகேஎஸ் இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதுதான் தேர்தல் வாக்குறுதி.

Erode East By Election: P.Chidambaram slams BJP, AIADMK

மாநிலத்தின் நிதி நிலவரம், தேவைகள் ஆகியவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு முன்னுரிமை அளித்தல் என்பதுதான் புத்திசாலித்தனமானது. அத்தனை வாக்குறுதிகளையும் ஒரே நாளில் எப்படி நிறைவேற்ற முடியும்? முடியாது. கொரோனா காலத்தில் அதிமுக அரசு செயலிழந்துவிட்டது. ஆனால் திமுக ஆட்சிதான் கொரோனா தொற்று பரவல் பிரச்சனையை சிறப்பாகக் கையாண்டது. தமிழ்நாட்டில் தற்போது 8 கோடி பேரில் 8 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவை வீழ்த்தியது வென்றது திமுக அரசுதான். திமுக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். உங்களது பிரதான கோரிக்கைகள் எதுவானாலும் திமுக அரசு உறுதியாக நிறைவேற்றும்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். சட்டசபையில் நிறைவேற்ற தீர்மானங்களை ஒருவர் தடுக்கிறார் எனில் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த போக்கை ஒருநாளாவது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கண்டித்து பேசி இருப்பாரா? ஆளுநர் இப்படி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது தவறு என சொல்லி இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியைத் தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருப்பாரா? இந்தி திணிப்பு விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்பாரா எடப்பாடி பழனிசாமி? எங்கே 3 நாளில் தமது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கட்டும்.

Erode East By Election: P.Chidambaram slams BJP, AIADMK

பாஜகவின் பின்புலத்தில் அதிமுக நிற்கிறது. அதிமுகவின் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் யார் பெரியவர் என்ற பிரச்சனை நீடிக்கிறது. அதிமுகவின் பிரச்சனையை டெல்லி பாஜக தீர்த்து வைக்கிறது. எடப்பாடி பழனிசாமி தம்மை பாஜகவின் கழுத்தில் சுற்றி இருக்கக் கூடிய பாம்பு என நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் பாஜக ஒரு நச்சு பாம்பு. அதன்பிடியில்தான் எடப்பாடி பழனிசாமி சிக்கி இருக்கிறார். ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அதேபோல பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+