தேர்தல் தள்ளிப்போயிட கூடாது.. மோப்பம் பிடித்த உளவுத்துறை.. ஸ்டாலினுக்கு போன நோட்.. என்னங்க நடக்குது?

திமுக தலைமை, தேர்தலுக்கு எந்த ரூபத்திலும் தடை விழுந்து விடக்கூடாது என கவலைப்படுகிறதாம் .

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இடைத்தேர்தலுக்கு தடை விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் சீரியசாக இருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முக்கியமான சில உத்தரவுகளை கட்சி நிர்வாகிகளுக்கும் பிறப்பித்து உள்ளாராம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

களநிலவரம் தற்போது வரை ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இந்த நிலையில்தான் இடைத்தேர்தலுக்கு தடை விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் சீரியசாக இருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து தேர்தல் பணியில் உள்ள சீனியர் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார். திமுக அரசின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ; அந்த நற்சான்றிதழ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் திமுகவினர் நேரடியாக செல்ல உதவும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். அந்த நற்சான்றிதழை பெற வேண்டுமானால், இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மிகப் பெரிய எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.

டெபாசிட்

டெபாசிட்

எதிர்த்து களத்தில் நிற்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு ஆரம்பத்திலேயே ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததால் , அதற்கேற்ப பல்வேறு வியூகங்களை வகுத்தப்படி தொகுதியில் களமாடி வருகிறார்கள். செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் 3-4 வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கே சுமார் 35 வார்டுகள் உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் வார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் நேரம்

தேர்தல் நேரம்

இவர்கள் தற்போது தேர்தல் நேரத்தில் செய்யும் பணிகள், ஆளும் கட்சி இறக்கும் பவர், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி போன்றவர்கள் இறங்கி வேலை செய்யும் போது வாக்கு 60 சதவிகிதம் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று திமுக திட்டமிட்டுள்ளது. ஆளுக்கு 4 வார்டுகளில் வேலை செய்யுங்கள், வாக்கு சதவிகிதம் 60க்கும் மேல் வர வேண்டும் என்று திமுக மேலிடம் தேர்தல் பணியாளர்களுக்கு டார்கெட் விதித்து இருக்கிறதாம். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் அதிமுக, பாஜக தலைவர்கள் தேர்தலில் முறைகேடு நடப்பதாக முறையிட்டுள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்ற கருத்துகள் பறக்கும் படையினரே சொல்லி வருகிறார்கள்.

உளவுத்துறை

உளவுத்துறை

இதனை மாநில உளவுத்துறையும் மோப்பம் பிடித்து முதல்வருக்கு நோட் போட்டுள்ளது. இந்த நிலையில்தான், இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தேர்தல் நடக்காமல் போனாலோ, ஒத்தி வைக்கப்பட்டாலோ செய்த தேர்தல் செலவுகளெல்லாம் பயனற்றுப் போகும். அதே சமயம், தேர்தல் மீண்டும் நடத்தப்படுகிறதோ அப்போது இதே அளவுக்கு மீண்டும் தேர்தல் செலவீனங்களை செய்ய வேண்டியதிருக்கும். மக்கள் மத்தியிலும் பெயர் கெட்டுவிடும்.

திமுக தலைமை

திமுக தலைமை

அதனால், அப்படி ஒரு சூழல் வரக்கூடாது என கருதும் திமுக தலைமை, தேர்தலுக்கு எந்த ரூபத்திலும் தடை விழுந்து விடக்கூடாது என கவலைப்படுகிறதாம் . இப்படிப்பட்ட சூழலிலும் சீனியர் அமைச்சர்களை தொடர்பு கொண்டு, தேர்தலை ஒத்தி வைக்க டெல்லியில் திட்டமிடப்படுகிறது. அதனால், தேர்தல் பணிகளில் கவனமாக இருங்கள். தேர்தல் ஆணையத்துக்கு எதிர்கட்சிகளிடமிருந்து புகார் போகிற அளவுக்கு எந்த முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை அனைத்து அமைச்சர்களிடமும் பாஸ் ஆகியிருக்கிறது. மேலும், தங்களின் வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள் தேர்தல் பணிகளில் உள்ள திமுக அமைச்சர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+