ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. திட்டமிட்டு ஆஃப் செய்யப்படும் ‘மைக்’..கொதிக்கும் தம்பிகள்..உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் திட்டமிட்டு தங்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு வேட்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

erode east by election ntk police

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கின்றனர்.

பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் திமுக, நாம் தமிழர் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி , உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மீது அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்காததால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 6 மணி வரை மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் 13 நாட்கள் மட்டுமே இடையில் இருக்கிறது.

ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பதாக களத்தில் உள்ள பிற வேட்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் உரிய விதிகளை பின்பற்றியே அனுமதி வழங்கப்படுகிறது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். அதாவது தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரம் குறித்து அனுமதி பெற வேண்டும். எந்த இடத்தில் பிரச்சாரம், எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல்கள் அதில் இடம்பெற வேண்டும்.

ஆனால் தற்போது பிரச்சாரத்திற்காக ஒரு கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த இடம் தேதி ஆகியவை இடம்பெறவில்லை. அதன் காரணமாகவே பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. முறையான தகவல்கள் இல்லாமல் அனுமதித்தால் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சினை செய்வார்கள். எனவே உரிய இடம் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு மனு வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+