ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! அதிமுக தூது ரிஜெக்ட்! 'கை'க்கு கை கொடுத்த தமிமுன் அன்சாரி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவித்தார் தமிமுன் அன்சாரி
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
தமிமுன் அன்சாரியை மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சியை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்துள்ளது.
தமிழ்நாட்டின் நலன் கருதி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரிப்பதாக தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. என இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தமிமுன் அன்சாரி மட்டும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தார். இவரிடம் காங்கிரஸ் தரப்பில் ஆதரவு கோரப்பட்ட நிலையில் பழைய கூட்டணிக் கட்சி என்ற முறையில் அதிமுக தரப்பிலும் தூது விடப்பட்டிருக்கிறது.

தேர்தல் பணிக்குழு
தொலைக்காட்சி விவாதங்களில் பலமுறை தன்னுடன் ஒன்றாக கலந்துகொண்டவர் என்ற அடிப்படையில் ஏற்கனவே பரிட்சயமுள்ள தமிமுன் அன்சாரியிடம், காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதையடுத்து தமிமுன் அன்சாரி இன்று தனது இடைத்தேர்தல் நிலைப்பாட்டை ஒரு வழியாக அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது கட்சி சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றையும் தமிமுன் அன்சாரி அமைத்திருக்கிறார்.

முழுவீச்சில் பணி
மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக மஜக முழுவீச்சில் பணியாற்றும் என அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் அங்கு வலிமையான கட்டமைப்போடு விளங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஆதரவையும் காங்கிரஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரம்
நாளை முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரிசையாக ஈரோடு கிழக்கில் களமிறங்கவுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளரே அறிவிக்கப்படாவிட்டாலும் அக்கட்சியினர் களப்பணியை தொடங்கிவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications