ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ’சர்க்கார்’ சம்பவம்! தனது வாக்கை வேறொருவர் போட்டதாக பெண் பகீர் புகார்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக பரபரப்பு புகாரை கூறி இருக்கிறார் பெண் ஒருவர். மேலும், இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைத்துள்ளனர்.
பிப்ரவரி 5ஆம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும் 37 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். மொத்தம் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 11 மணிக்கே 26 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை தேர்தலில் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக பரபரப்பு புகாரை கூறி இருக்கிறார் பெண் ஒருவர்.
பரிதா பேகம் என்ற பெண் இன்று தனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் அதிகாரியில் வழங்கிய பூத் ஸ்லிப் உடன் வாக்களிக்கச் சென்றார். ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதாக கூறி வாக்குச்சாவடி அலுவலர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பூத் ஸ்லிப்பும், வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருக்கும் போது வேறொருவர் எப்படி தனது வாக்கினை செலுத்த முடியும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண் ஒருவரின் வாக்கை மற்றொருவர் செலுத்தியதாக இருந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications