அதிமுக கோட்டையை அடித்து துவம்சம் செய்த அன்பில் மகேஷ்! ஈரோடு விறுவிறு! 4 வார்டு வித்தியாசம் தாறுமாறு
அதிமுக வாக்கு வங்கி அதிக உள்ள பகுதிகளில் கூட காங்கிரஸ் முன்னிலை.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட 4 வார்டுகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அதிமுக வாக்கு வங்கி அதிகம் உள்ள வார்டுகளை அமைச்சர் கே.என்.நேரு தனக்கு ஒதுக்கிய போதும், அதனை சேலஞ்சாக எடுத்துக்கொண்டு களமாடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அன்பில் மகேஷ்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அன்னை சத்யா நகர், சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்தல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு குறிப்பிட்ட வார்டுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன. ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் மட்டும் அந்தந்த அமைச்சர்கள் பணியாற்றினால் போதும் என்ற நிலை இருந்தது. அந்த வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த அன்னை சத்யா நகர், சூரியம்பாளையத்தை உள்ளடக்கிய 20,21 22,23 வது வார்டுகள் ஒதுக்கப்பட்டன.

சேலஞ்ச்
எத்தனையோ சீனியர் அமைச்சர்கள் இருக்கின்ற போதும் இந்த பகுதிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டன. அவரும் இதனை ஒரு தனிப்பட்ட சேலஞ்சாக எடுத்துக்கொண்டு முழுமையாக அங்கேயே முகாமிட்டு தீவிர களப்பணியாற்றினார். திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாக களமிறக்கி காலை மாலை என நாளொன்றுக்கு இரண்டு முறை வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வைத்தார். இந்நிலையில் அதன் முடிவு நல்ல முறையில் வந்திருப்பதால் அன்பில் மகேஷ் தரப்பு ஹேப்பி.

வாக்கு வித்தியாசம்
20வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 517 ஓட்டுக்கள் பெற்றிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 280 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருக்கிறார். வித்தியாசம் 237. இதேபோல் 21வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 314 ஓட்டுக்கள் பெற்றிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 75 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருக்கிறார். வித்தியாசம் 239.

அதிமுக வாக்கு வங்கி
22வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 471 ஓட்டுக்கள் பெற்றிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 101ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருக்கிறார். வித்தியாசம் 370. இதேபோல் 23வது வார்டில் இளங்கோவன் 411 வாக்குகளும், தென்னரசு 142 வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். இதன் வித்தியாசம் 269. மொத்தத்தில் அதிமுக கோட்டையாக கருதப்பட்ட பகுதிகளிலேயே இளங்கோவன் ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications