திராவிட மாடல் சாதனை: பெரிய வெற்றி கிடைக்கும்! ஈரோடு கிழக்கில் வாக்களித்தபின் சந்திரகுமார் பேச்சு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று காலை திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் மனைவி மற்றும் மகளுடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார். கொசுவண்ண வீதியிலுள்ள BVB குழந்தைகள் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினின் ஆசியோடும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன், அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலை சந்தித்துள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.

erode east by election ntk dmk

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் இன்று காலை தனது வாக்கினை செலுத்தினார்.

திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் தனது வாக்கினை கொசுவண்ண வீதியிலுள்ள BVB குழந்தைகள் பள்ளியில் செலுத்தினார். அவருடன் மனைவி அமுதா, மகள் ருசிதா ஸ்ரீ, மகன் மெகர்வின் ஸ்ரீ ஆகியோரும் வாக்கினை செலுத்தினர். இதைத்தொடர்ந்து விசி சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியோடும், தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலில் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலை பொறுத்த வரையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உதயசூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

அந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களே இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும் . தற்போது வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் என்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டு வந்திருக்கின்றேன்.

இந்த தேர்தலில் இந்த கிழக்கு தொகுதியில் இருக்கின்ற மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என உங்களையெல்லாம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+