ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு! ஒரே ஆட்சியில் 3 முறை வாக்கு! வரலாறு படைக்கப் போகும் ஈரோடு கிழக்கு தொகுதி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதை அடுத்து விரைவில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக வாக்களிக்க போகின்றனர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அதற்கு பிறகு 2016 தேர்தலிலும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிமுக திமுக கூட்டணி களம் கண்டன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக மட்டும் 65 இடங்களை கைப்பற்றியது.
அதே நேரத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான ஈவேரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திருமகன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் யுவராஜாவை சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி மாதம் நான்காம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என திமுக தலைமை அறிவித்தது. யார் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக கேஎஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் திமுக கூட்டணி பலம், அமைச்சர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றால் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் இறங்கிய அதிமுக வேட்பாளரான தென்னரசு 43,923 வாக்குகள் பெற்ற நிலையில், இளங்கோவன் ஒரு லட்சத்து பத்தாயிரத்து 156 வாக்குகள் பெற்று 66 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
இதை அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தார் .தொடர்ந்து காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்த அவர் கடந்த 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதை அடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியலுக்கு கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. சட்டசபை செயலர் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தவுடன், இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். இதை அடுத்து தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். ஏற்கனவே காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் அல்லது பிற மாநில சட்டசபை தேர்தல்களோடு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு ஆட்சி காலத்தில் மூன்று முறை வாக்களித்த வாக்காளர்கள் என்ற வரலாறு படைக்க இருக்கிறார்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள். 2021 தேர்தலில் திருமகன் ஈவேராவை வெற்றிபெற வைத்த அவர்கள், அதற்கு பிறகு 2023 இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்தனர். இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்குள்ளாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சிக் காலத்தில் அல்லது ஒரே ஆட்சிக்கு மூன்று முறை வாக்களித்தவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் என்ற வரலாற்றுப் பட்டியலில் இடம்பெற இருக்கின்றனர்.
மேலும் ஒரே ஆட்சிக்காலத்தில் இருமுறை சட்டமன்ற தேர்தலை சந்தித்த தொகுதி என்ற பெயரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கிடைக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications