ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல்.. காங்.க்கு மீண்டும் சான்ஸ் தரும் திமுக! பதறும் அதிமுக! அப்போ பாஜக?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவின் மறைவை தொடர்ந்து தமிழ்நாட்டில் அந்த ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவெரா திருமகன் காலமானார். இதையடுத்து மண்டபம் வீதியில் இருக்கும் ஈவெரா திருமகன் வீட்டில் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

மரணம்

மரணம்

இவர் பெரியாரின் சகோதரரான கிருஷ்ணசாமியின் மகன் ஈவிகே சம்பத்தின் பேரன் ஆவார். கடந்த 3 தினங்களுக்கு மேலாக இவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவெரா திருமகன் மரணம் தமிழ்நாடு அரசியலை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வர உள்ளது. பொதுவாக ஒரு எம்எல்ஏ இடம் காலியானால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்துவிட்டு, தேதி முடிவு செய்யப்படும். இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குள் தற்போது காலி ஆகி இருக்கும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி என்பதை தேர்தல் ஆணையம் எம்எல்ஏ சீட் காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு நடத்தப்பட்ட தீர வேண்டும்.

ஈவெரா திருமகன்

ஈவெரா திருமகன்

பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பு இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கும் அதே சமயத்தில் இங்கு தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் பாதியில் நடக்கும். அதே மாதத்தில் இங்கே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்

தேர்தல்

இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். இந்த நிலையில்தான் தற்போது இந்த தொகுதி காலி ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா கூட்டணி எப்படி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இங்கே யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது இந்த இடைத்தேர்தலில் உறுதியாகிவிடும். திமுக சார்பாக இங்கே வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா அல்லது காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

அதே சமயம் அதிமுக கூட்டணியில் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இடையே மோதல் உள்ளது. தமிழ் மாநில காங்கிரசும் அதிமுகவுடன் நெருக்கமாக இல்லை. இதனால் அதிமுக இங்கே கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது தனியாக இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தனியாக களமிறக்கினாலும் உட்கட்சி மோதல் காரணமாக பார்ம் பியில் கையெழுத்து போட போகும் அதிகாரம் யாருக்கு உள்ளது, இரட்டை இலை சின்னம் முடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணையுமா? அமமுக, தேமுதிக கட்சிகள் என்னென்ன செய்யும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+