ஈரோடு கிழக்கு.. திமுக ஆபிஸ் முன் சட்டென குவிந்த "துணை ராணுவம்".. உள்ளே என்ன இருக்கு.. ஒரே பரபரப்பு!
ஈரோடு கிழக்கில் இன்று காலையில் இருந்து தேர்தல் பறக்கும்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையத்தில் இன்று தேர்தல் பணிகளை செய்யும் துணை ராணுவ படையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கே இருக்கும் திமுக தேர்தல் பணிமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர். வரும் நாட்களில் முதல்வர் ஸ்டாலினும் இங்கே பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரச்சாரம்
திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மக்களுக்கு கொலுசு , குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு வீடு வீடாக குக்கர் வழங்கப்படுவதாகவும், பெண்களுக்கு பாக்கெட்டுகளில் கொலுசு வழங்கப்படுவதாகவும் புகார் வைக்கப்பட்டது.

அதிமுக
முக்கியமாக அதிமுக சார்பாக மக்களுக்கு கொலுசு, குக்கர் விநியோகம் செய்யப்பட்டதாக பறக்கும் படையினருக்கும் புகார் சென்றுள்ளது. அதிமுகவினர் இரவோடு இரவாக கொலுசு கொடுப்பதாக புகார் வைத்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கில் சிந்தா நகர், மாதவ காடு பகுதிகளில் பறக்கும் படையினர் களமிறங்கி சோதனை செய்தனர். ஆனால் குக்கர், கொலுசு எதுவும் அங்கே பறிமுதல் செய்யப்படவில்லை. மற்ற பகுதிகளில் தற்போது பறக்கும்படையினர் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினர் தற்போது இங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பறக்கும்படையினர் தற்போது இங்கே வார்டு வாரியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பறக்கும்படி
இந்த நிலையில்தான் இன்று ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இன்று தேர்தல் பணிகளை செய்யும் துணை ராணுவ படையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கே இருக்கும் திமுக தேர்தல் பணிமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். திமுக தேர்தல் பணிமனையில் மக்களை திமுகவினர் அடைத்து வைத்து இருப்பதாக புகார் வைக்கப்பட்டது. அதிமுக கூட்டங்களுக்கு செல்ல விடாமல் மக்களை திமுகவினர் அடைத்து வைத்து இருப்பதாக புகார் வைக்க்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு
60க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் அப்பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலைஏற்பட்டது. அங்கே மக்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கிருந்து மக்கள் யாரும் மீட்கப்படவில்லை. பணிமனையில் மக்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு இடையில் தற்போது அங்கே இருக்கும் குடோன்களிலும் தற்போது பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். பெரிய கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறதா என்றும் பறக்கும் படையினர் விசாரணை செய்து வருகின்றனர். வார்டு வாரியாக சாலைகள் அடைக்கப்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியே பதற்றத்துடன் காணப்படுகிறது,
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications