ஈரோட்டில் கிடுகிடுவென போன முருங்கைக்காய் விலை.. வாங்க தயங்கும் மக்கள்! இறங்க மறுக்கும் முருங்கை ரேட்
ஈரோடு: முருங்கைக்காய் விலையை கேட்டு ஆடிப்போய்விட்டார்கள் பொதுமக்கள்.. ஏற்கனவே வரத்து விளைச்சல் சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையும் சேர்ந்து கொண்டதால் இல்லத்தரசிகள் முருங்கை விலையை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.. முருங்கை விலை உயர்வுக்கு என்ன காரணம்? வியாபாரிகள் இதுகுறித்து சொல்வதென்ன? விரிவாக இங்கே பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் முருங்கைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த மாநிலத்தின் காலநிலை மற்றும் மண் அமைப்பு முருங்கைக்காய்க்கு ஏற்றதாக இருக்கிறது.

குறிப்பாக நாசிக், சோலாப்பூர் போன்ற பகுதிகளில் வெப்பம் உச்சமாகவும், மழை அளவு மிதமாகவும் இருக்கும், இதனால் முருங்கை செடிகள் நன்றாக வளர முடிகிறது.
மகாராஷ்டிரா மாநிலம்
மேலும் நிலம் சுருங்கிய நீர் வெப்பநிலை மற்றும் மணல் கலந்த உலர் நிலம் கொண்டது, இது செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீர் சரியான அளவில் கிடைக்கும் சூழலை உருவாக்குகிறது. இதனால் மகாராஷ்டிரா முருங்கைக்காய்க்கு முக்கியமான விளைச்சல் மையமாக மாறியிருப்பதுடன், பல மாநிலங்களுக்கு வழங்கும் விற்பனைக்கான ஆதாரமாக உள்ளது.
அந்தவகையில் நமக்கும் பெருமளவு முருங்கைக்காய், முதன்மையாக மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கிடைக்கிறது. வர்த்தகர்கள் லாரிகள் மூலம் முருங்கைக்காயை தமிழ்நாட்டின் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
முருங்கைக்காய் வாங்க முடியல
தமிழ்நாட்டில் சில காலங்களில் உள்ளூர் முருங்கை வரத்து குறைவாக இருக்கும்.. குறிப்பாக குளிர்காலம் அல்லது மழைக்காலம், வெப்பம் போன்ற சூழ்நிலைகள் விளைச்சலை பாதிக்கும் போது மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விளைந்த முருங்கைக்காய் வர்த்தகமாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சந்தையில் முருங்கைக்காய் பற்றாக்குறை குறைக்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கிறது.
ஆனால் சமீப நாட்களாகவே முருங்கை விலை உயர்ந்து வருகிறது... உள்ளூர் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் விலை அதிகரிப்பதாக தெரிகிறது..
உதாரணத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்து கொண்டால், முருங்கைகாய் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.10, ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விலை கட்டுப்படியாகாமல் முருங்கை காயை ஆடு மாடுகளுக்கு உணவாக போட்டனர். கடந்த ஒரு வார காலமாகவே விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. ஒரு கிலோ ரூ.60 வரை கொள்முதல் செய்தனர். ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
ஈரோட்டில் இறங்க மறுக்கும் முருங்கை விலை
இப்போது தமிழகம் முழுவதுமே முருங்கை விலை உயர்ந்துள்ளது... இதில் ஈரோடு மாவட்டத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.. காரணம், வெள்ளக்கோவில், புதுப்பை, முத்தூர், காங்கேயம் மற்றும் மயில்ரங்கம் பகுதிகளில் பயிரிடப்பட்ட முருங்கைக்காய், வியாபாரிகள் கொள்முதல் செய்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக உள்ளூர் விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் சந்தையில் கிடைக்கும் முருங்கைக்காய் அளவும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கேயம் அருகே உள்ள வெள்ளக்கோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்தில், உள்ளூர் விவசாயிகள் வளரும் முருங்கைக்காயை சந்தைக்கு நேற்று கொண்டு வந்தனர்.. அப்போது செடி முருங்கையும் மர முருங்கையும் சேர்த்து, கிலோ விலை 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வு குறித்து முருங்கை வியாபாரிகள் சொல்லும்போது, மழை காரணமாக சில செடிகள் முற்றிலும் வளர முடியாததால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைப் பொறுத்து, குறைவான விளைச்சலால் சந்தையில் முருங்கைக்காய் வரவு குறைவாக உள்ளது, அதனால் விலை மாறுபடும் நிலை உருவாகியுள்ளது.
விலை கேட்டு இல்லத்தரசிகள் கவலை
பருவநிலை காரணமாக சில பகுதிகளில் விளைச்சல் குறைவாகவும், மற்ற பகுதிகளில் அதிகமாகவும் இருக்கும், அதனால் வர்த்தகர்கள் மற்ற பகுதிகளிலிருந்து முருங்கைக்காய் கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்வார்கள். இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ற அளவு முருங்கைக்காயை சந்தையில் பெறலாம், ஆனால் விலை அதிகமாகவே இருக்கும்.
இதே நிலைமைகள் இந்தியாவின் பல காய்கறி சந்தைகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன, மழை மற்றும் போக்குவரத்து காரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் விலை மாறுபடும் தன்மை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications