ஈரோட்டில்.. அரசு பள்ளியில் "ரகசியமாக" வந்து நின்றது யார் பாருங்க.. பார்த்ததுமே பதறிட்டாங்க.. சூப்பர்ல
ஈரோடு: ஈரோடு பள்ளிகளில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. என்ன நடந்தது? ஆசிரியர்கள், மாணவர்கள் ஏன் பதறிப்போய்விட்டார்கள்?
தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார்..

அட்டவணை: அதன்படி 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணையையும், பள்ளிக்கல்வித் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திடீரென ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தந்தார்..

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும், அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்..
அந்த பள்ளிகளின் வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா? என்று ஒவ்வொரு பகுதியாக சென்று நேரடியாகவே ஆய்வுகளில் மேற்கொண்டார்..

மாணவர்கள்: அதேபோல, கிச்சனுக்கும் சென்று, மாணவர்களுக்கு சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். பிறகு, பள்ளி மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்... இதற்கு பிறகு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.. இதற்கு பிறகு, அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, "நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் இப்போதுதான் பேசுகிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. நமக்கென ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் அனைவருமே முக்கிய பங்கு வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ரகசிய வருகை: இதெல்லாம் அமைச்சர்களின் வழக்கமான ஆய்வுகள் என்றாலும், அன்பில் மகேஷ் ஆய்வுக்கு வரப்போவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம்.. அமைச்சர் வரப்போகிறார் என்று முன்கூட்டியே யாருக்கும் தகவல் தரப்படவில்லையாம்.. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பதறிப்போய்விட்டார்களாம்.
அதுமட்டுமல்ல, பள்ளி மாணவர்களிடம், அவர்களது பாடங்களில் இருந்து கேள்விகளை அமைச்சர் கேட்க துவங்கிவிட்டதால், மாணவர்களும் பதட்டமாகிவிட்டார்கள்.. எனினும் அமைச்சரின் கேள்விகளுக்கு, மாணவர்கள் பதிலளித்தனர்.. பிறகு அவர்களிடம் அவர்களிடம் கற்பிக்கப்பட்டவை குறித்தும் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications