திமுக எம்பி கொடுத்த குரல்.. ஒன்றரை வருடத்திற்கு பின் சேர்ந்த காதல் ஜோடி.. தடுக்கப்பட்ட ஆணவ கொலை!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் பெரும் போராட்டத்திற்கு பின் இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் செல்வன். பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்று பெண்ணை இவர் காதலித்து வந்தார். 2017ல் இருந்து இவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் வேறு வேறு ஜாதியினர் என்பதால் இளமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு சம்மதிக்கவில்லை. அந்த இளைஞரை நீ திருமணம் செய்ய கூடாது, திருமணம் செய்தால் நடப்பதே வேறு என்று கூறி, ஆணவ கொலை செய்ய போவதாக பெண்ணின் பெற்றோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்
ஆனாலும் எதிர்ப்பை மீறி செல்வன் இளமதி ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 2020ல் வீட்டினர் சம்மதம் இன்றி இவர்கள் ஜாதி மறுத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். 2020ல் மார்ச் மாதம் இந்த திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்த இடம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்ட பெண்ணின் பெற்றோர், அன்று இரவே இளமதியை கட்டாயப்படுத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

புகார் அடி உதை
செல்வனை அடித்து உதைத்து இளமதியை அவரின் பெற்றோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதோடு தனது மகளை செல்வன் கடத்திவிட்டார் என்றும் போலீசாரிடம் இளமதி பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்துதான் உறவினர்களின் மிரட்டலை அடுத்து பெற்றோருடன் செல்ல இளமதி சம்மதம் தெரிவித்தார்.

கோரிக்கை விடுத்து வந்தார்
கடந்த ஒன்றரை வருடமாக இதனால் இளமதியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி செல்வன் கோரிக்கை விடுத்து வந்தார். சட்டப்படி திருமணம் செய்து உள்ளோம். ஆனாலும் பெற்றோர் அந்த பெண்ணை கடத்தி சென்றுவிட்டனர். இதனால் இளமதியை மீட்டு கொடுக்க வேண்டும் என்று செல்வன் கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில்தான் திமுக எம்பி செந்தில் குமார் தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ கொலைகள் குறித்தும், ஜாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசினார்.

திமுக எம்பி பேச்சு
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆணவ கொலைகள் குறித்து பேசிய திமுக எம்பி செந்தில்குமார் ஈரோடு காதல் ஜோடி குறித்தும் பேசினார். ஈரோடு காதல் ஜோடி பிரிவு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டி ஆணவக்கொலைக்கு எதிராக பேசினார். இதனால் இந்த சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது. ஈரோட்டில் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட ஜோடியை பெற்றோர் மிரட்டி பிரித்து அழைத்து சென்றது அப்போது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

உயிருக்கு அச்சுத்தல்
இதையடுத்துதான் சில நாட்களுக்கு முன் இளமதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக செல்வனுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். தன்னை ஆணவ கொலை செய்ய பெற்றோர் திட்டமிடுவதாக இளமதி செலவனிடம் ஆடியிவ் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த செல்வன் தனது மனைவியை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தார்.

பாதுகாப்பு
அதோடு தனது மனைவிக்கும், தனக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் நேற்று பெண் வீட்டாரை அழைத்து பேசி, இளமதியை செல்வனுடன் சேர்த்து வைத்தனர். சரியாக ஒன்றரை வருட போராட்டத்திற்கு பின் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனர். போலீஸ் துரிதமாக செயல்பட்டதால் ஆணவ கொலை ஒன்று தடுக்கப்பட்டுள்ளது.

நன்றி
இந்த நிலையில் நெட்டிசன்கள் பலர் இந்த விஷயத்தை நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று குரல் கொடுத்ததற்கு எம்பி செந்தில்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஆணவக் கொலை செய்ய திட்டமிட்ட உறவினர்களை அம்பலப்படுத்தியதோடு நில்லாமல் பாராளுமன்ற கதவையும் தட்டி இணையர்களை சேர்த்து வைத்த செந்தில் குமார் எம்பி அவர்களுக்கு நன்றி என்று நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications