அமைச்சரிடம் கோரிக்கை.. மறு நிமிடமே தற்கொலை! திமுக கவுன்சிலர் கணவர் மீது புகார் - லாட்டரி காரணமா?
ஈரோடு: லாட்டரி விற்பனையை எப்படியாவது தடை செய்யுங்கள் என அமைச்சர் முத்துச்சாமிக்கு கோரிக்கை விடுத்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அடுத்த முல்லைநகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விசைத்தறி உரிமையாளரான இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்போது நூல் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.62 லட்சம் பணம் மொத்தத்தையும் லாட்டரியில் போட்டு பறிகொடுத்து இருக்கிறார் ராதாகிருஷ்ணன். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில், தனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39 வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்தான் காரணம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். செந்திலிடம் ரூ.30 லட்சத்தை நஷ்டயீடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என அவர் கூறினார்.
லாட்டரி சீட்டால் ஈரோடு மாநகரில் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும், லாட்டரி இல்லா மாவட்டமாக ஈரோட்டை மாற்ற வேண்டும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தான் பேசிய வீடியோவை பலருக்கும் அனுப்பி வைத்த ராதாகிருஷ்ணன் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
வீடியோவைப் பார்த்த பலர் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாட்டரி சீட்டில் பல லட்சம் ரூபாயை இழந்து அமைச்சருக்கு கோரிக்கை வைத்தவுடன் தற்கொலை செய்து கொண்டது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications