தொட்டிலில் குழந்தை சடலம்..தூக்கில் தாய்! ‘ஆண்மையை’ கிண்டல் செய்த மனைவி! குழந்தையோடு கொன்ற கணவன்!
ஈரோடு: ஈரோடு அருகே கட்டிய மனைவி மற்றும் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் கொலை செய்ததாக தகவல் வெளியான நிலையில், ஆண்மை குறித்து கிண்டல் செய்ததால் தனது மனைவியை கொலை செய்ததாக அதிர வைக்கும் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் கணவன்.
ஈரோடு காந்திபுரத்தை சேர்ந்தவர் 32 வயதான கவின் குமார். பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அமராவதி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத நிலையில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பிறகு இரு ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி கர்ப்பமானார். தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஒன்றரை வயதாகும் குழந்தைக்கு ஆதிரா என தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு குழந்தையை தூங்க வைத்து விட்டு கணவனும் மனைவியும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் கவின் குமார் கண் விழித்த போது அருகில் இருந்த மனைவியை காணவில்லை என தேடி இருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் அமராவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். இதை அடுத்து உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
வீட்டின் தொட்டிலில் இருந்த குழந்தையும் அசைவற்று இருந்த நிலையில் குழந்தையை சோதித்த போது குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு இருவரது உடலும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தாய் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் இருவரது உடலிலும் காயங்கள் இல்லாததால் குழந்தையை கொன்று விட்டு அமராவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
விசாரணையை விரிவுபடுத்திய போது தான் திடீர் திருப்பமாக கவின் குமார் தான் மனைவி மற்றும் குழந்தையை கொன்றது தெரிய வந்திருக்கிறது. குழந்தையையும் தாயையும் கொலை செய்துவிட்டு குழந்தையை தொட்டிலிலும் தாயை தூக்கிலும் போட்டு இருக்கிறார் கவின் குமார். தொடர்ந்து கவின் குமாரிடம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக அதிர வைக்கும் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தான் கொலைக்கான உண்மை காரணம் தெரிய வந்திருக்கிறது. திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் கவின் குமாருக்கும் அமராவதிக்கும் குழந்தை பிறக்கவில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனை சென்றபோது கவின் குமாருக்கு உயிரணுக்கள் குறைவாக இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு கவின்குமார் அமராவதி தம்பதிக்கும் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை பிறந்தும் தனது ஆண்மை குறித்து அமராவதி அடிக்கடி கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அதிர வைக்கும் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் கவின்குமார். தற்போது கவின்குமாரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications