"ப்ளீஸ்.. ஒரு மணி நேரம்தான்.." ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. போலீஸ்காரர் செய்த வேலையை பார்த்தீங்களா?
ஈரோடு தலைமை காவலர் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது
ஈரோடு: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், ஆபாசமாக பேசியுள்ளாராம் ஒரு போலீஸ்காரர்.. இதுகுறித்த விவகாரம்தான் ஈரோட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகரஞ்சினி.. இவர் கோர்ட்டில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகிவிட்டது..
ஆனால், மனக்கசப்பு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.. தன் குழந்தையுடன் தனியே வசித்து வந்துள்ளார். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது..

நிலுவை
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இவருடைய குழந்தை காணாமல் போய்விட்டது.. அதனால் சித்தோடு ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்துள்ளார்.. ஸ்டேஷனில் தலைமை காவலராக சிவகுமார் இருந்துள்ளார்.. அவரிடம் குழந்தை காணாமல் போனதை பற்றி தெரிவித்துள்ளார்.. இதையடுத்து குழந்தை குறித்து விசாரணை ஆரம்பமானது.. அப்போது, குழந்தை நாகரஞ்சினியின் கணவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது...

விவாகரத்து
விவாகரத்து கேஸ் கோர்ட்டில் இருக்கும்போது, எப்படி குழந்தையை கடத்தலாம் என்று கேட்டு, மறுபடியும் கணவர் மீது ஒரு கேஸ் தந்தார் நாகரஞ்சினி. இதனால் அடிக்கடி அதே ஸ்டேஷனுக்கு நாகரஞ்சினி சென்று வரும்படி ஆகிவிட்டது.. அதே தலைமை காவலர் சிவகுமாருடன் அடிக்கடி பேசும் சூழலும் உருவானது.. இந்த பழக்கம் நட்பானது.. ஒருகட்டத்தில், நாகரஞ்சினிக்கு ரூ. 3 லட்சம் வரை சிவகுமார் கடனாக கொடுக்கும் அளவுக்கு நட்பு உருவானது..

போன்
இந்த பணத்தை ஒருநாள் சிவக்குமார் திரும்ப கேட்டுள்ளார்.. ஆனால், அதை உடனே தருவதில் நாகரஞ்சனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.. பணத்தை தராமல் இழுபறியும் வந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், நாகரஞ்சினிக்கு போனை போட்ட சிவகுமார், ''மாட்டு ஆஸ்பத்திரி பின்னாடி ஒரு வீடு இருக்கு. அங்கே ஒரு அம்மா இருக்கிறார்.. நீ அங்கே வந்தால், அந்த அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு ஒரு மணி நேரம் என்கூட தனிமையில் இருந்துட்டு போ.. அப்படி செய்தால் உனக்கு என்ன உதவி வேணுமோ எல்லாத்தையும் செய்றேன்" என்று சிவக்குமார் பேசியுள்ளார்.

ஆடியோ
இந்த ஆடியோவை அப்படியே பதிந்து கொண்ட நாகரஞ்சனி, சிவக்குமார் மீது இன்னொரு புகார் தந்தார்.. அதை பற்றி போலீசார் விசாரிக்கும்போது, "அது என் குரலே இல்லை.. வேணும்னா குரல் டெஸ்ட் பண்ணிக்குங்க" என்று சிவகுமார் விளக்கம் தந்துள்ளராம்.. இப்போது, இந்த உண்மை தன்மையை ஆராய மாவட்ட டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications