ஈரோடு அருகே கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டை வெட்டி அதன் ரத்தம் குடித்த பூசாரி பழனிசாமி (45) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த திருவிழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடந்து வருகிறது. திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் அம்மனை தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
மந்தையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த 1500-க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை கொண்டு வருவார்கள், மருளாளி மந்தைக்கு வருவார். முதலில் இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு கிடா வழங்கப்படும். பின்னர் முறைப்படி நங்காவரம் பண்ணை ஆடுகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் ஆடுகள் நேர்த்திக்கடன் கொடுக்கப்பார்கள். மருளாளி வெள்ளி கிண்ணத்தில் ஆட்டின் இரத்தத்தை பிடித்து குடித்து அருள்வாக்கு கூறுவார். , இந்த சடங்கு திருச்சியில் ஏக பிரபலம்.
இதேபோல் திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கிடா, சேவல்கள் பலி கொடுக்கப்படும். அதில் கிடா, சேவல் வெட்டப்பட்டு அதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை ஆக்ரோஷமாக குடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதுதவிர மாசி மாதம் மகாசிவராத்தியை முன்னிட்டு அமாவாசை நாளில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா பிரசித்தி பெற்றதாகும். காளியம்மன், அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் படையல் போட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா நடைபெறும் பல்வேறு கோயில்களில் ஆட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் சிவன் ராத்திரியன்று நடைபெறும் 'குட்டி கடித்தல்' , 'மயான கொள்ளை' என்ற நிகழ்ச்சியில் சிறு ஆட்டின் குரல்வளையை வாயலேயே கடித்து நேர்த்திக் கடன் செய்யும் பழக்கம் இருக்கிறது. அப்படி கடிக்கும்போது ஆட்டின் ரத்தம் பெரும் வேகத்தில் வாயினுள் பாயும். வருடாவருடம் நடைபெறும் சடங்கு இது. மூடநம்பிக்கைக்கு இப்போது ஒரு பலி ஏற்பட்டுள்தாக கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications