ஈரோடு ராஜேஸ்வரி வீட்டில் பார்த்த எக்குத்தப்பான வேலை.. யார் அந்த ஆண் நண்பர்கள்.. சிக்கியது எப்படி?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ஊத்தங்காட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நண்பர்கள் இருவரை அழைத்து வைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிபிசிஐடி போலீஸ் என்று கூறி வந்த இரண்டு பேர், ராஜேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி அவர்களிடம் பணம் பறித்தார்களாம்.. இந்த விவகாரத்தில் திட்டம் போட்டு கொடுத்ததே ராஜேஸ்வரி தான் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள் என பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் ஊத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் ராஜேஸ்வரி என்பவர் நம்பியூர் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லர் ஆக பணிபுரிந்து வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த விஜயகுமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ராஜேஸ்வரியின் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் விஜயகுமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேரையும் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி ராஜேஸ்வரி தனது வீட்டுக்கு வரவழைத்து பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு ராஜேஸ்வரியின் நண்பர்கள் 2 பேர் வந்திருக்கிறார்களாம். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த விஜயகுமார், விஸ்வநாதனிடம், நாங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் என்றும் நீங்கள் 2 பேரும் ராஜேஸ்வரியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறீர்கள். இதை வெளியே பரப்பி விடுவோம். இதை வெளியே சொல்ல வேண்டாமென்றால் எங்களுக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்களாம்.
இதனால் பயந்து போன 2 பேரும் பணத்தை கொடுப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் தாங்கள் கூறும் 2 பேரின் வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறியிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து விஜயகுமார் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரமும், விஸ்வநாதன் ரூ.60 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து 2 பேரும் சென்றுவிட்டார்கள் இதுகுறித்து கடந்த 10-ந் தேதி நம்பியூர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஸ்வரி நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் எனக்கூறி விஜயகுமார், விஸ்வநாதனிடம் பணத்தை திருடியது உறுதியானது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்..
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications