Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் குஷி.. ஈரோடு, திருப்பூர், கரூர்.. இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து 3 மாவட்டங்களின், முதல் போக நன்செய் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்திற்கு அருகே கட்டப்பட்டிருக்கிறது பவானிசாகர் அணை.. அதாவது மாயாறும், பவானி ஆறும் கூடும் இடத்தில் இந்த அணை உள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய அணை என்ற பெருமையை பெற்றுள்ள பவானிசாகர் அணை தெற்கு ஆசியாவின் பெரிய மண் அணையாகவும் திகழ்ந்து வருகிறது.

Erode Tiruppur karur Bhavanisagar dam

மின்சாரம்: சுதந்திரத்திற்கு பிறகு கட்டப்பட்ட அணை என்பதால் கூடுதல் சிறப்பையும் பெற்று வருகிறது.. இந்த அணையிலுள்ள 2 நீர் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 16 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீராதாகவும் விளங்கி வரும் இந்த அணை, மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்டது. எனவே, ஈரோடு மட்டுமல்லாமல், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

தமிழகத்தில் சமீப காலமாகவே நல்ல மழை பெய்து வரும்நிலையில், அணையின் நீர்மட்டமும் 97 அடியை எட்டிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், 2024-25ம் ஆண்டிற்கான முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை: இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: "2024-25ம் ஆண்டு முதல் போகப் பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் நன்செய் பாசனத்திற்கு 15.8.2024 முதல் 12.12.2024 வரை 120 நாட்களுக்கு சுமார் 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் பவானி பெருந்துறை ஈரோடு மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள விவசாய நிலங்களும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள விவசாய நிலங்களும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வசதி: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில், அட்டவணைப்படி ஆகஸ்ட் 15ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாகும்.. இத்தனை நாளும், வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது.

அதேசமயம் சில வாரங்களுக்கு முன்பு அணையில் நீர்மட்டம் மிக குறைவாக இருந்தது. அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை நீர்மட்டம், 96 அடியை கடந்துள்ளதால், வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை முடிந்தவரை நிறைவு செய்துவிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குரல் கொடுத்து வந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி: எனவே, பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது பற்றி, நீர் வளத்துறை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது.. இதையடுத்தே, இன்றைய தினம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் இன்று திறக்கப்படுவதால், 3 மாவட்ட விவசாயிகளும் குஷியில் உள்ளனர்.. அத்துடன், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+