Erode TVK Meeting: ஈரோடு தவெக பொதுக்கூட்டத்தில் உணவு ஏற்பாடு இல்லை - செங்கோட்டையன் தகவல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தவெக தலைவர் விஜய் நாளை ஈரோடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் முதல் பொதுவெளி நிகழ்ச்சி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தவெக கூட்டத்தில் உணவு வசதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு, செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

தவெக கூட்டம்

ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் பலத்த வியூகங்களை வகுத்து வருகின்றன. நாம் தமிழர், தவெக கட்சிகளும் மல்லுகட்டி வருகின்றன. திமுகவிடம் இருந்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க தவெக காய் நகர்த்தி வருகிறது. மாற்று கட்சிகளில் உள்ள சீனியர் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.

ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக மேற்கொண்ட பிரச்சாரத்தின் தொடக்கத்திலேயே சிக்கல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் கரூர் தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு தவெக மற்றும் விஜய்யின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது.

விஜய் ஈரோடு விசிட்

கரூர் கூட்ட சம்பவத்திற்கு பிறகு, விஜய் தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சேலத்தில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது. கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் விஜய் நாளை ஈரோடு மாவட்டம் வரவுள்ளார். விஜயமங்கலம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

கொங்கு மண்டலத்தில் விட்ட பெயரை, அதே கொங்கு மண்டலத்தில் சரி செய்யும் விதமாக விஜய்யின் ஈரோடு விசிட்டை தவெக திட்டமிட்டு வருகிறது. அரசியலில் அனுபவமிக்க செங்கோட்டையன் இதற்கான பணிகளை பக்காவாக வகுத்து வருகிறார். காவல்துறை ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளது. விஜய்யின் ஈரோடு விசிட் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உணவு இல்லை..

பொதுக்கூட்ட அரங்கில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது
தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை, ஒப்பற்ற மக்கள் தலைவர், தவெக தலைவர் விஜய் நாளை ஈரோடு மாவட்டம் வருகை புரிகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எல்லோரும் வியக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும். குடிநீர், மருத்துவம், கழிப்பறை, வாகனங்களை அருகிலேயே நிறுத்துவதற்கு பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் வருவோருக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20 இடங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கூட்ட நிகழ்விலும் குடிநீர் பாட்டில் வழங்கப்படும். காவல்துறையின் நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள், தொண்டர்கள் காலை 8 மணியளவில் இருந்தே கூட்டத்திற்கு வரலாம். நிகழ்ச்சிக்கு பாஸ் அல்லது கியூ.ஆர். கோட் போன்றவை தேவையில்லை. அனைவரும் எளிதாக வந்து எதிர்கால தமிழகத்தை உருவாக்கும் மக்கள் தலைவர் விஜய்யின் பேச்சை கேட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்தி செல்லலாம். ஒரு தொலைக்காட்சியில் நாளைய பொதுக்கூட்ட நிகழ்வில் உணவு வழங்கப்படும் என்று செய்தி வந்துள்ளது. ஆனால் உணவு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+