அப்பாவை இழந்து கலங்கிய திருமகனின் மகள்.. கையை இறுக்க பற்றி உள்ளுக்குள் கதறும் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து கலங்கியுள்ள அவரது மகளும் தனது பேத்தியுமான சமணாவின் கைகளை பற்றிக் கொண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அமர்ந்திருக்கும் காட்சி பார்ப்போர் மனதை கலங்கடிக்கிறது.
புத்திர சோகம் என்பது நம் எதிரிக்கு கூட வரக் கூடாது என்பதுதான் அனைவரது பிரார்த்தனையாக உள்ளது. மகனையோ மகளையோ பறிகொடுத்துவிட்டு தள்ளாத வயதில் பெற்றோர் இருப்பர். இவர்களை கிண்டலாக சிலர் விமர்சிப்பர்.
ஆனால் தங்கள் உயிராகிய பிள்ளைகளை இழந்து ஒவ்வொரு நொடியையும் இவர்கள் கடத்துவது என்பது நரக வேதனையாகவே இருக்கும். இதற்கு பிள்ளையோடு சேர்ந்து நாமும் சென்றிருந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்க தோன்றும். மகளோ மகனோ இறக்கும் போது இத்தனை வயதில் நான் குத்துக்கல்லு மாதிரி இருக்கேன், சின்ன வயதில் நீ போய்ட்டியே என்றுதான் கதறுவார்கள்.

துடிதுடிப்பு
பிள்ளைகளை இழந்து இவர்கள் கழிக்கும் கொஞ்ச நஞ்ச காலமும் நெருப்பில் நிற்பது போல் அத்தனை துடிதுடிப்பு இருக்கும்! கிட்டதட்ட அது போன்ற ஒரு புத்திர சோகத்தைத்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முதல் அனுபவித்து வருகிறார். இவருக்கு இரு மகன்கள். இவர்களில் இளைய மகன் திருமகன் ஈவெரா.

சட்டசபை தேர்தல்
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சி பணிகளையும் மக்கள் சேவையையும் பம்பரம் போல் சுழன்று ஆற்றி கொண்டிருந்தார். இந்த நிலையில் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருமகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் திருமகன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் மரணமடைந்தார். இதையடுத்து திருமகனின் உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சி பேதமின்றி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இளங்கோவனை கட்டி அணைத்து ஆறுதல் கூறி தேற்றினார். கனிமொழி எம்பி திருமகனின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். இன்றைய தினம் மதியம் திருமகனின் உடல் தகனம் செய்யப்படுவதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களாக இளங்கோவன் வீட்டிற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருகை தருகிறார்கள்.

கண்ணாடி அறை
மகன் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி அறைக்கு பக்கத்தில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அமர்ந்திருக்கிறார். அவரை கட்சி நிர்வாகிகள் சந்தித்தவாறு கைகொடுத்து துக்கத்தில் பங்கேற்று வருகிறார்கள். அவருக்கு பக்கத்தில் 17 வயதுக்குள் இருக்கும் திருமகனின் மகளும் இளங்கோவனின் பேத்தியும் அமர்ந்திருக்கிறார்.

கண்களை குளமாக்கும் காட்சி
அவருக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறார். அவர் அந்த சிறுமிக்கு தோழியா இல்லை உறவா என தெரியவில்லை. அந்த பெண் திருமகனின் பெண்ணின் தோளில் கை போட்டபடியே ஆறுதல் கூறி வருகிறார். கவலைத் தோய்ந்த முகத்துடன் இருக்கும் பேத்தியின் முகத்தை பார்க்க முடியாமல் கலங்கும் இளங்கோவன் பேத்தியின் கையை இறுக்க பற்றி கொண்டு அமர்ந்திருக்கிறார். இந்த காட்சி பார்ப்போர் கண்களை குளமாக்குகின்றன.

குதிரையேற்ற போட்டியில் சாம்பியன்
திருமகனின் பேத்தி பெயர் சமணா. இவர் கடந்த நவம்பர் மாதம் நடந்த குதிரையேற்ற போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்று ஜூனியர் சாம்பியன் கோப்பையை பெற்றார். இதையடுத்து அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வரை திருமகனும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications