ஈரோடு இடைத்தேர்தல்.. கொட்டகை அமைத்து பணம் பட்டுவாடா.. செங்கோட்டையன் குற்றச்சாட்டு!
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதாக செங்கோட்டையன் புகார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் பணம் பட்டுவாடா செய்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அதேபோல், திமுகவினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை திமுகவினர் கடைப்பிடிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

செங்கோட்டையன் புகார்
இதையடுத்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக மற்றும் தமாகா கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிகிருஷ்ணன் உண்ணியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பணம் பட்டுவாடா
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், ஈரோடு கிழக்கில் 110க்கும் மேற்பட்ட இடங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கொட்டகை அமைத்து, தேநீர், பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இன்றைய தேதி வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் ரூ.35,64,00,00 செலவு செய்துள்ளார். அதுகுறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் செலவு கணக்கு
முறைகேடாக உரிய அனுமதியின்றி அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செட்டுகளுக்கான செலவுத் தொகையை காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு சேர்க்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள செட்டுகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும். வாடகை எடுத்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சேர்களுக்கான வாடகை செலவை காங்கிரஸ் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.

அதிகார துஷ்பிரயோகம்
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளுங்க கட்சியினர் பயன்படுத்தும் வாகனங்களில் கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும். அரசு முத்திரை சின்னத்தை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பயன்படுத்தும் ஆளும் கட்சியினர் மீது உரிய சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மதிப்பதும், கடைப்பிடிப்பதும் இல்லை.

செங்கோட்டையன் கோரிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார் என வாக்காளர்கள் சந்தேகப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
திட்டமிட்டபடி நாளை ஜூன் 4ம் தேதி தமிழக பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன் முக்கிய தகவல் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications