பிரச்சாரம் செய்தால் வருமானம்! 25ஆம் தேதி வரை வேலைக்கு பிரேக்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ருசிகரம்!
ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மூலம் வருமானம் பார்க்கும் பலர்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தின ஊதிய அடிப்படையில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் இப்போது பிரச்சாரம் செய்வதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
காலை 3 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என நாளொன்றுக்கு 7 மணி நேரம் ''போடுங்கம்மா ஓட்டு'' என்ற முழக்கத்துடன் அரசியல் கட்சியினருடன் வீதி வீதியாக உலா வருகின்றனர்.
இதில் திமுக, அதிமுக, என இரண்டு கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி இவர்கள் பிரச்சாரம் செய்ய செல்வது தான் ஹைலைட் ஆகும்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திரும்பிய திசையெல்லாம் ''போடுங்கம்மா ஓட்டு'', ''பெரியோர்களே தாய்மார்களே'' மைக் செட்கள் அலறுகின்றன. குறிப்பாக மாலை நேரம் வந்துவிட்டால் போதும், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு வண்டி வண்டியாக பொழுதுபோக்கு நிகழ்வுகள் காத்திருக்கின்றன. அதிமுகவுக்கு ஓட்டுக்கேட்டு எம்.ஜி.ஆர் வேடமணிந்து ஆடல் பாடல், திமுகவுக்கு ஓட்டுக்கேட்டு மேடை கச்சேரி என களைகட்டுகிறது.

தின ஊதியம்
இதனிடையே திமுக, அதிமுகவை சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுடன் பிரச்சாரத்துக்கு வருவதற்காக, தின ஊதியத்தின் அடிப்படையில் வேலைக்கு செல்வோர்களை குறிவைத்து அவர்களை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அதற்குரிய வருமானத்தையும் கொடுத்துவிடுவதால் இப்போது வேலைக்கு செல்லும் ஆர்வத்தை விட பிரச்சாரத்துகு செல்ல ஆர்வம் பலருக்கும் அதிகரித்திருக்கிறது.

தேர்தல் பணிமனை
இதனால் வேலைக்கு கிளம்பி செல்வதை போல் தினமும் காலையிலேயே தண்ணீர்பாட்டில், சாப்பாடு என எடுத்துக்கொண்டு தங்களுக்கு பிடித்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிமனைகளுக்கு படையெடுத்து விடுகிறார்கள். அங்கிருந்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் , முக்கியப் பிரமுகர்கள், வேட்பாளர்களுடன் பிரச்சாரத்துக்கு செல்லும் இவர்கள் நாளொன்றுக்கு 4 கிமீ குறையாமல் நடந்துவிடுகிறார்கள்.

தலைவர்கள் வருகை
இனி வரும் நாட்களில் தான் முதலமைச்சர் ஸ்டலின், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்யவுள்ளார்கள். இதனால் ஈரோடு கிழக்கில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications