ஈரோடு பெண்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. நாளை கலெக்டர் ஆபீஸில் மிஸ் பண்ணிடாதீங்க
ஈரோடு: ஈரோட்டில் கடன் வாங்க விரும்பும் பெண்கள், 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்படம், ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, விலைப்புள்ளி, வங்கி கணக்கு விவரங்களுடன் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கடன் வசதியாக்கல் முகாமில் இலவசமாக விண்ணப்பித்து கடன் பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்க 'தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும், தொழில்திறன் சார் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும் திட்ட மதிப்பில் ரூ.10 லட்சம் வரை தொழில் செய்ய பிணையமில்லாமல், வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மானியம் அளிக்கப்படும். இதன்மூலம் உற்பத்தி, சேவை மற்றும் வணிகத்தொழில்கள் தொடங்கலாம்.

அடிப்படை கல்வித்தகுதி மற்றும் குடும்ப வருமான வரம்பு எதுவும் இத்திட்டத்தில் விதிக்கப்படவில்லை. எனவே ஆர்வம் கொண்ட 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட மகளிர் மற்றும் திருநங்கைகள் புகைப்படம், ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, விலைப்புள்ளி, வங்கி கணக்கு விவரங்களுடன் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கடன் வசதியாக்கல் முகாமில் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்" இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்று கூறி தான் கடன் முகாமை அறிவித்துள்ளார். அந்த திட்டம் பற்றியும் விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கவும் தமிழக அரசு "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்" (என்ற புதிய திட்டத்தை 2025-26 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தகுதிகள்
நிதியுதவி மற்றும் மானிய விவரங்கள்
கடனுதவி: உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களைத் தொடங்க அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் (அதிகபட்சமாக ₹2 லட்சம்) தமிழக அரசால் வழங்கப்படும். பயனாளி தனது சொந்த முதலீடாக திட்ட மதிப்பில் 5% மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள 95% தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம். இந்தக் கடனைப் பெற வங்கிக்கு எந்தவிதமான சொத்துப் பிணையமும் (Collateral) வழங்கத் தேவையில்லை.
'தகுதி அளவுகோல்கள்
பாலினம்: பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் வருமானம்: இத்திட்டத்தில் விண்ணப்பிக்கக் கல்வித் தகுதி அல்லது குடும்ப வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
குடும்ப உறுப்பினர்: ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
வசிப்பிடம்: விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
வங்கி கடன் ஒப்புதல் அளித்த பிறகு, பயனாளிகளுக்குத் தொழில் மேலாண்மை குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்,
தொழில் முனைவோர் பயிற்சி: 3 நாட்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படும்.
திறன் பயிற்சி: தேவைப்படும் பட்சத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மூலம் கூடுதல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை
சாதிச் சான்றிதழ்.
தொழில் திட்ட அறிக்கை
விலைப்புள்ளி பட்டியல் (Quotation - GST எண்ணுடன்).
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்.
குறிப்பு: ஏற்கனவே கலைஞர் வினைத்திட்டத்தில் (KKT) பயன்பெற்ற மகளிர், தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications