"மீசை வெச்ச ஆம்பளை".. புரியுதா, காசை வாங்கிக்குங்க.. ஈரோட்டில் எகிறிய எடப்பாடி.. இன்றும் பிரச்சாரம்
இன்றும் தன்னுடைய பிரச்சாரத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர்கிறார் எடப்பாடி பழனிசாமி
ஈரோடு: நடக்க போகும் இடைத்தேர்தலில், குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி களமிறங்கி உள்ளார்.. இதற்காகவே முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை பிரச்சாரத்தில் புது வியூகங்களையும் கையில் எடுத்துள்ளதுடன், அதை ஈரோடு கிழக்கிலும் செயல்படுத்தி வருகிறார்.. முதல்கட்ட பிரச்சாரத்தை துவக்கி உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வையும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் உற்றுநோக்கி வருகின்றன.
நெருங்கி வரும் இடைத்தேர்தலை முன்னிறுத்தி, தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.. திமுகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாமல், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருமே ஈரோட்டில் களப்பணியில் இறங்கி உள்ளனர்..

கமல்ஹாசன்
முதல்வர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.. உதயநிதி ஸ்டாலினும், வரும் 19 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் 19ம் தேதி பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். தலைவர்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், திமுகவின் அமைச்சர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் தொகுதியில் படுபிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.. எப்படியாவது பலமான வாக்கு வங்கியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு பிளான்களை வகுத்து வருகிறார்.. அந்தவகையில்தான் 2கட்டமாக மொத்தம் 5 நாட்கள் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

புரோட்டா போடறாங்க
இதற்காக நேற்றைய தினம் தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்தையும் ஈரோட்டில் துவங்கியிருந்தார். அப்போது, திமுகவை சரமாரியாக விமர்சித்து பேசியிருந்தார் எடப்பாடி.. குறிப்பாக, "திமுக ஆட்சி அமைந்து இந்த 21 மாதங்கள் ஆன நிலையில், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இப்போது வீதி வீதியாக வாக்கு கேட்டு வரும் அமைச்சர்கள், தேர்தலுக்கு முன்பு குறை கேட்க வந்தார்களா? மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர்கள் புரோட்டா போட்டும், டீ போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் உங்களை அமைச்சராக்கியுள்ளனர். டீ, போண்டா, புரோட்டா போடுவதற்காக அமைச்சராக்கவில்லை.

கொட்டகை
ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி, சக்தி இல்லை. அதனால், ஏழை மக்களை 120 இடங்களில் கொட்டகை அமைத்து அமர வைத்துள்ளனர்.

வாங்கிக்கோங்க
திமுகவிற்கு எடுத்து தான் பழக்கம். கொடுத்து பழக்கம் இல்லை. இடைத்தேர்தலில் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திமுகவினர் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது, திமுகவை கடுப்பாக்கி வருகிறது. இந்நிலையில், இன்று அதாவது 16-ம் தேதி தன்னுடைய பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார் எடப்பாடி.. நேற்று மாலை வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி, வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

சூட்சும கணக்கு
நீட் விஷயத்தில் முதல் கையெழுத்து என்று அன்று உதயநிதி சொன்னதையே, விடாப்பிடியாக பிடித்து கொண்டுள்ள எடப்பாடி, அதை வைத்தே உதயநிதியின் இமேஜை தன்னுடைய பிரச்சாரங்களில் டேமேஜ் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாக தெரிகிறது.. அது நேற்றைய தின பிரச்சார பேச்சிலும் எதிரொலிக்கவே செய்தது.. இன்றும் நாளையும், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம் தொடர உள்ளது.. இதற்கு பிறகு, 2-வது கட்ட பிரச்சாரத்தை அடுத்த வாரம் 24, 25-ம் தேதிகளில் மேற்கொள்கிறார். மேலும், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் தன்னுடைய பிரச்சாரங்களில் கொண்டு செல்லும்போது, இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளார் எடப்பாடி.. அந்தவகையில், இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

பூத் கமிட்டி
இந்த தேர்தலில் எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு திமுகவினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனராம்.. இதற்காக அவர்கள் 238 வாக்கு சாவடிக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்துள்ளனர். அதாவது, ஒரு பூத்துக்கு 10 பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் 50 வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.. இதைதான் அதிமுகவும் உற்று கவனிக்கிறது.. எனவேதான், திண்ணை பிரச்சாரங்களில் கவனம் செலுத்தும்படியும், அதிமுக அல்லாதவர்களையும் குறி வைத்து, வாக்குகளை அள்ள வேண்டு என்றும் எடப்பாடி தரப்பில் உத்தரவு பறந்துள்ளதாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications