19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்
Recommended Video
ஈரோடு: இன்னொரு ஆணுடன் மனைவி நிவேதா ஜாலியாக இருப்பதை நேருக்கு நேர் பார்த்துவிட்ட முனியப்பன், அவரது தலையை வெட்டி கொன்றே விட்டார்! அது மட்டுமில்லை.. நிவேதாவின் தலையை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெருந்துறை மக்களுக்கு தூக்கி வாரி போட்டுள்ளது!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு வயது 28. சிலிண்டர் போடும் வேலை பார்க்கிறார்.
இவருக்கு கடந்த 7 மாசத்துக்கு முன்னாடிதான் நிவேதா என்ற பெண்ணுடன் கல்யாணம் நடந்தது. நிவேதாவுக்கு வயது 19!

வாக்குவாதம்
வேலை முடிந்தவுடன் நேற்றிரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார் முனியப்பன். அப்போது வீட்டில் நிவேதா, வேறொரு இளைஞரோடு ஜாலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனார். உடனே நிவேதாவுக்கும் முனியப்பனுக்கும் சண்டை ஆரம்பமானது.

மீண்டும் சண்டை
ஒரு கட்டத்தில் முனியப்பன் நிவேதாவிடம், "இது சரிப்பட்டு வராது.. வா.. நான் உன்னை உங்க அம்மா வீட்டில் விட்டு விடுகிறேன்" என்று சொல்லி பைக்கில் அழைத்து சென்றார். எருக்காட்டுவலசு பகுதியில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது திரும்பவும் சண்டை ஆரம்பமானது.

தலை துண்டானது
இதனால் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த முனியப்பன், தன்னிடமிருந்த கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்தார். இதில் தலை தனியாக துண்டாகி விழுந்தது. பிறகு அந்த தலையை எடுத்து பைக்கின் முன் பக்கம் வைத்து கொண்டார். உடலை எடுத்து பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி வைத்து விட்டார். இப்படியே பைக்கை படு வேகமாக ஓட்ட ஆரம்பித்தார்.

முனியப்பன் கைது
இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். பைக்கில் வேகமாக வந்த முனியப்பன் ஒரு வீட்டின் சுவரின் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். அவருடன் சேர்ந்து பைக்கில் இருந்த முண்டமும், தலையும் தனித்தனியாக உருண்டு விழுந்தன. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடியதுடன், உடனடியாக பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications