ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய அழுத்தம் வரப்போகிறது.. எடப்பாடிக்கு மட்டும் "அப்படி" நடந்தால் கேம் ஓவர்.. எச்சரிக்கும் புள்ளி

ஈரோடு கிழக்கில் மோசமாக தோல்வி அடைந்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எடப்பாடிக்கு பெரிய அழுத்தம் வரும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சின்னம் இல்லாமல் படுதோல்வி அடைந்தால் அவரின் நிலைமை மோசமாகும், அவருக்கான ஆதரவு பெரிய அளவில் அடி வாங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூடியூபிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்ன வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் எடப்பாடி தரப்பு போட்டியிடும் என்று சிலர் கூறுகிறார்கள். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் போட்டியிட்டால் தொண்டர்கள் இடையே அவருக்கு.. பாருங்க சின்னம் இல்லாமல் கூட போட்டியிடுகிறார் என்று பாராட்டு, பெயர் கிடைக்க கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதில் அவர் தரப்பு சின்னம் இல்லாமல் படுதோல்வி அடைந்தால் நிலைமை மோசமாகும். அவருக்கான ஆதரவு பெரிய அளவில் அடி வாங்கும். தோல்வி மோசமான தோல்வியாக இருந்தால் அவருக்கு எதிராக அழுத்தம் வரும்.

பெரிய அழுத்தம்

பெரிய அழுத்தம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவருக்கு பெரிய அழுத்தம் வரும். சின்னத்தை திரும்ப பெறுங்கள் அல்லது பிரிந்தவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அவருக்கு எதிராக அழுத்தம் வைக்கப்படும். அவரின் ஒற்றை தலைமை முயற்சிக்கே சிக்கல் ஏற்படும். அவர் மட்டும் சின்னம் கிடைக்காமல் கவுரமாக தோல்வி அடைந்தால் சிக்கல் இல்லை. ஆனால் மோசமாக தோல்வி அடைந்தால் அவருக்கு பெரிய சிக்கலாகும். மோசமான தோல்வி அடைந்தால் எடப்பாடிக்கு எதிராக கடும் அழுத்தம் கொடுக்கப்படும். அவர்
வாக்கு நன்றாக வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் மோசமாக தோல்வி அடைந்தால் அவருக்கு சிக்கல்தான்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம் வழக்கில் என்ன நடக்கும் என்ற குழப்பம் உள்ளது. யாருக்கும் கிடைக்காது என்று சிலர் சொல்கிறார்கள் . எடப்பாடிக்கு கிடைக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். சின்னம் கிடைக்காது என்று சொல்லும் சிலர்.. உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை குறிப்பிடுகிறார்கள். ஆனால் இன்னும் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக முன்பு வந்த உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் தேர்தல் ஆணையம் பக்கம் பாலை நீதிமன்றம் திருப்பி விட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் இப்போது சின்னத்தை முடக்குகிறோம். அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இவர்கள் எல்லாம் நடந்து கொள்வதை பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் ஒன்றாக இருப்பார்களா என்று சந்தேகம்தான். நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிடுவோம் என்று அண்ணாமலை கூறுகிறார். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம். 25 இடங்கள் கொடுங்கள் என்று அண்ணாமலை பாஜகவிடம் கேட்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பேர வலிமை கூடும் என்றே எதிர்பார்க்கிறேன், என்று துக்ளக் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

English summary
If Edappadi Palanisamy loses in Erode East By-Election badly, he may have to face lot of pressures says Thuglak Ramesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X