கருணாநிதி பேனா இல்லையென்றால்.. அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார்.. ஆ.ராசா ஆவேசப் பேச்சு!
பேனா நினைவு சின்னம் குறித்த விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா இல்லையென்றால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார் என்று திமுக எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். அதேபோல் ரூ.80 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைக்கக் கூடாது என்று கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லையென்றும், ஜெயலலிதாவிற்கு ரூ.79 கோடியில் எதற்காக நினைவிடம் கட்டினார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், திமுக எம்பி-க்கள், முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் பேனா நினைவு சின்னம் குறித்து எதிர்க்கட்சிகள் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் கரட்டாங்காடு பகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், இந்த தேர்தல் ஈரோட்டுக்கான தேர்தல் மட்டும் இல்லை.

ஆ.ராசா பேச்சு
அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்கு அடிநாதமாக உள்ள தேர்தலாக கருதுகிறேன். ஏன் இந்த தேர்தல் தேசத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் கருத்துக்கு மோடியால் ஆபத்து வந்துள்ளது. இதனை எதிர்க்க மு.க.ஸ்டாலினைத் தவிர எந்த முதலமைச்சருக்கும் தைரியம் இல்லை. மீறி எதிர்த்தால் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.

ஜனநாயக ஆட்சி
டெல்லியில் ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவேன் என மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். அந்த பயம் மோடிக்கு உள்ளது. அதனால்தான் மோடி டெல்லியில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப் போகிறது என பார்க்கிறார். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் மோடிக்கு செய்தி போகும்.

அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்
அண்மை காலமாக பேனா சிலைக்கு ரூ.80 கோடியா என்று கேட்கிறார்கள், அந்தப் பேனா விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, சைக்கிள் ரிக்சா கொடுத்தது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய சட்டத்தில் கையெழுத்திட்டது. இந்த பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருப்பார். வானதி சீனிவாசன் வழக்கறிஞராக இல்லாமல் தென்னந்தோப்பில் மட்டை பொருக்கி கொண்டிருப்பார்.

எடப்பாடிக்கு யோக்கியதை இல்லை
எடப்பாடி பழனிச்சாமி பிஏ படித்து இருக்க மாட்டார். அவரை ஜெயலலிதா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டார். இந்தப் பேனா இல்லை என்றால் எதுவுமே இல்லை. தமிழ் மொழியை செம்மொழியாக்கிய பேனா அந்த பேனா. அந்தப் பேனாவிற்கு ரூ.80 கோடி வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார். இதைச் சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு யோக்கியதை இல்லை.

ரூ.79 கோடிக்கு நினைவிடம்
ஜெயலலிதாவிற்கு ரூ.79 கோடியில் எதற்காக நினைவிடம் கட்டினீர்கள். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் சொன்னது. உச்ச நீதிமன்றம் குற்றவாளி என தண்டனை கொடுத்த ஒரு குற்றவாளிக்கு ரூ.79 கோடிக்கு கல்லறை கட்டினீர்கள். அதனை நாங்கள் தாங்கி கொண்டுள்ளோம். பெருந்தன்மையாக விட்டோம். ஆனால் எத்தனையோ நலத்திட்டங்களை செய்த பேனாவிற்கு கேள்வி கேட்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications