அழியாத மை–னு சொன்னாங்களே.. அது பொய்யா? ஈரோட்டில் இப்படியா நடக்கணும்! அலட்சிய அதிகாரிகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் கை விரலில் வைக்கப்பட்ட மை உடனடியாக அழிந்துபோனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நம் நாட்டில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வாக்காளர்களின் கை விரலில் அழியாத மை வைக்கப்படும் முறையாகும்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஒருவர் வாக்களிக்க செல்லும்போது அவரது கை விரலில் அழியாத மை வைக்கப்படும். அதன்பிறகு தான் ஒருவரால் ஓட்டு போட முடியும். இன்று நடந்த சட்டசபை தேர்தலிலும் அனைவரின் கை விரல்களிலும் அழியாத மை வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஒரு பூத்தில் வாக்களித்து செல்லும் வாக்காளர்களின் கை விரலில் அழியா மை வைக்கப்பட்டது. ஆனால் சிலரது விரல்களில் வைக்கப்பட்ட அழியாத மை சில நிமிடங்களிலேய காய்ந்து மறைந்தது. இதுபற்றி 2 பேர் புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் உடனடியாக சுதாரித்து தவறு எங்கே நடந்தது? என்று பார்த்தனர். முதற்கட்ட விசாரணையில் அழியாத மை வைப்பதற்கு பதில் Stamp Pad Ink எனும் மையை வாக்காளர்களின் கை விரல்களில் தவறுதலாக வைத்ததும், இதனால் தான் அந்த மை அழிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுதாரித்த அதிகாரிகள் அனைவரின் கை விரல்களிலும் அழியாத மை-யை வைத்தனர். இந்த சம்பவத்தால் குறிப்பிட்ட அந்த பூத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications