இருந்ததும் சரிந்ததும்! ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் வாக்கு வங்கியில் "ஓட்டை".. அருந்ததியர்கள் காரணமா?
ஈரோடு கிழக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் டெபாசிட் இழந்துள்ளது.
ஈரோடு; ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி இருந்த வாக்குகளையும் இழந்து படுதோல்வி அடைந்து உள்ளது. நாம் தமிழரின் இந்த படுதோல்விக்கு அருந்ததியர்கள் வாக்குகள் முக்கிய காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது.
1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சி 8474 வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. தேமுதிக வெறும் 1177 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது.

திமுக - காங்கிரஸ் வெற்றி
இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை இங்கே பதிவு செய்துள்ளது. நாம் தமிழர் டெபாசிட் இழந்துள்ளது. தேமுதிக டெபாசிட் இழந்து உள்ளது. நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக பிரச்சாரம் செய்தும் படுதோல்வியை அடைந்து உள்ளது. அதவாது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த தேர்தலில் நாம் தமிழர் மோசமான வாக்குகளை பெற்றுள்ளது. உதாரணமாக ஈரோடு கிழக்கில் கடந்த முறை நடத்த தேர்தலில் காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம் பெற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம் பெற்றார். நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம் பெற்றார்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம் பெற்றார். கடந்த முறை 7.65 சதவிகித வாக்குகள் பெற்ற நாம் தமிழர் இந்த முறை வெறும் 5.04 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதன்படி 11,629 வாக்குகளில் இருந்து 3 ஆயிரம் வாக்குகள் வரை குறைந்து 8474 வாக்குகள் சென்றுள்ளது. இதன் மூலம் நாம் தமிழர் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தும் தோல்வி அடைந்தது தெளிவாகி உள்ளது. இங்கே பிரச்சாரம் செய்ய தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் நிர்வாகிகள் வந்தும் கூட அங்கே நாம் தமிழர் மோசமாக தோல்வி அடைந்து உள்ளது.

அருந்ததியர்கள்
அருந்ததியர்கள் வாக்குகள் நாம் தமிழரின் இந்த தோல்விக்கு காரணமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த 6 சதவிகித அருந்ததியர்கள் வாக்குகள்தான் மொத்தமாக மைனாரிட்டிகளுக்கு எதிராக திரும்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அருந்ததியர்கள் வாக்குகள்
சீமான் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விஷயங்கள் எல்லாம் பெரிய அளவில் சர்ச்சையாகின. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்தது. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக இரண்டு நாட்களுக்கு முன் சீமான் பிரச்சாரம் செய்தார். மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் ஜாதி பற்றி பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார். அவர்களை தூய்மை பணி செய்ய விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கன். அவர்கள் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் தூய்மை பணியாளர்கள்தான் அருந்ததியர்கள் என்று சீமான் கூறினார். அவரின் இந்த பேச்சு காரணமாக ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அருந்ததியர்கள் போராட்டங்களை செய்து வருகின்றனர்.

விரட்டினர்
நாம் தமிழர் நிர்வாகிகளை விரட்டி அடித்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில்தன மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் அருந்ததியர்கள் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கே கை கலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த மோதலுக்கு பின் திமுக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், எங்கள் பேரணியில் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தாக்குதலுக்கு திமுகதான் காரணம். பயம் அச்சம் காரணமாக திமுகதான் எங்கள் மீது தாக்கல் நடத்தியது, என்று சீமான் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த அருந்ததியர்கள் வாக்குகள் அப்படியே சீமானுக்கு எதிராக சென்றுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications