தனியாக இறங்குவோம்.. ஈரோடு கிழக்கில் பாஜக போடும் சரவெடி.. நிஜமா? இப்படி மட்டும் நடந்தா எல்லாம் ஓவர்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ள நிலையில் பாஜக இங்கே போட்டியிட தீவிரமாக ஆர்வம் காட்டி வருவதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

காலியாகும் தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார். இனி தமிழ்நாடு தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவிப்பார். அதன்பின் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பு இல்லை.

கர்நாடக தேர்தல்
அதனால் கர்நாடக தேர்தலுடன் இந்த இடைத்தேர்தல் சேர்ந்து நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஏப்ரல் - மே மாதங்களில் இந்த இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் இடைத்தேர்தல் என்பதால் திமுக இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முக்கியமாக கொங்கு மண்டலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் திமுக இதை மிக முக்கியமான தேர்தலாக பார்க்கிறது. ஆனால் திமுகவிற்கு பதிலாக மரியாதை கருதி இங்கே கடந்த முறை வென்ற காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் இந்த இடத்தை திமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தனித்து
அதிமுகவில் என்ன நடக்கும், கட்சி யாருக்கு செல்லும் என்று தெரியாத நிலையில், பாஜக இங்கு தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை பாஜக தனது கோட்டை என்று கூறி வருகிறது. அதிமுக எடப்பாடி - பாஜக இடையிலும் நல்ல உறவு இல்லை. இதனால் இந்த தொகுதியில் அதிமுகவே போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் பாஜக தனித்து போட்டியிட்டு தனது பலத்தை சோதிக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக இங்கே வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும்.

பாஜக 10%
தமிழ்நாட்டில் தங்களின் வாக்கு சதவிகிதம் 10க்கும் மேல் உள்ளது என்று பாஜக கூறி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும்.

காங்கிரஸ்
அதோடு இங்கே காங்கிரஸ் போட்டியிடும் பட்சத்தில் காங்கிரசை எதிர்ப்பதை பாஜக அதிகம் விரும்பும். கூட்டணியில் அதிமுக இங்கே போட்டியிட வாய்ப்பு வழங்காத பட்சத்தில் பாஜக தனியாகவே இறங்கும் முடிவை எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. அதிமுக உடைந்து இருக்கும் நிலையில் தங்களை இரண்டாவது பெரிய கட்சியாக முன்னிறுத்திக்கொள்ள பாஜகவிற்கு இந்த தேர்தல் உதவியாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் கணக்கு போடுகிறதாம். இது தொடர்பாக டெல்லி பாஜக தலைவர்கள் சிலரும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்களாம்.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தடை? கொதித்து எழுந்த அண்ணாமலை, அர்ஜுன் சம்பத்! -
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications