நேரம் நெருங்கிடுச்சு.. அடிச்சு தூக்கும் பாஜக.. களமிறங்கும் "பெண்" புள்ளி.. அப்படியே ஸ்டன் ஆன அதிமுக!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு பாஜக சார்பாக பெண் வேட்பாளர் ஒருவரை களமிறக்க அக்கட்சி மேலிடம் முயன்று வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் வேகம் பிடிக்க தொடங்கி உள்ளது. அமைச்சரவை மாற்றம், ஆளுநர் - முதல்வர் மோதல், எடப்பாடி - ஓபிஎஸ் வழக்கு, அண்ணாமலை - காயத்ரி என்று சூடாக இருந்த தமிழ்நாடு அரசியலை மேலும் சூடாக்கும் விதமாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன்.

இடைத்தேர்தல்
இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார்.

தேர்தல் அதிகாரி
ஆனால் இன்னும் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி இதை பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை. இனி தமிழ்நாடு தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவிப்பார். அதன்பின் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். அதாவது எந்த தேதியில் தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அதே நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க வேண்டும்.

இடைத்தேர்தல்
பொதுவாக இடைத்தேர்தல் செலவை கட்டுப்படுத்தும் விதமாக பெரிய தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும். வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இடைத்தேர்தல்கள் தனியாக நடத்தப்படும். ஆனால் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பு இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தலுடன் இந்த இடைத்தேர்தல் சேர்ந்து நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஏப்ரல் - மே மாதங்களில் இந்த இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் இடைத்தேர்தல் என்பதால் திமுக இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாஜக
இன்னொரு பக்கம் நாங்கள்தான் பெரிய கட்சி என்று முஷ்டி முறுக்கிக்கொண்டு இருக்கும் பாஜகவிற்கும் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் பாஜக இதை மிக முக்கியமான தேர்தலாக பார்க்கிறது. இந்த தேர்தலில் வெல்லும் பட்சத்தில் அல்லது அதிக வாக்குகளை பெறும் பட்சத்தில் அதிமுக பாஜகவிற்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். பாஜக இங்கே வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும்.

பாஜக தனித்து
அதிமுகவில் என்ன நடக்கும், கட்சி யாருக்கு செல்லும் என்று தெரியாத நிலையில், பாஜக இங்கு தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை பாஜக தனது கோட்டை என்று கூறி வருகிறது. அதிமுக எடப்பாடி - பாஜக இடையிலும் நல்ல உறவு இல்லை. இதனால் இந்த தொகுதியில் அதிமுகவே போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் பாஜக தனித்து போட்டியிட்டு தனது பலத்தை சோதிக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. . இந்த இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும்.

அண்ணாமலை
தமிழ்நாட்டில் கவனம் பெற இந்த இடைத்தேர்தல்தான் நேரம் என்று பாஜக நினைக்கிறதாம். அதேபோல் அண்ணாமலைக்கும் தனது மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து டெல்லியிடம் நல்ல பெயர் வாங்க வாய்ப்பு கொடுக்கும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை எல்லாம் மனதில் வைத்தே பாஜக தனித்து போட்டியிடும் என்கிறார்கள். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக பெண் வேட்பாளர் ஒருவரை களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாம். இதற்காக இரண்டு பெண் வேட்பாளர்களை பாஜக மனதில் வைத்து இருக்கிறதாம். அதில் ஒருவரை களமிறக்க பாஜக விரும்பும் என்கிறார்கள்.

வானதி
தமிழ்நாடு பாஜகவில் தற்போது உள்ள 4 எம்எல்ஏக்களில் 2 எம்எல்ஏக்கள் பெண்கள். வானதி, சரஸ்வதி இருவரும் பெண்கள். இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு பெண் எம்எல்ஏவை உள்ளே அனுப்ப பாஜக திட்டமிட்டு வருகிறதாம். டெல்லி இதற்காக பெண் நிர்வாகி ஒருவரை டிக் அடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்களின் வாக்கு சதவிகிதம் 10க்கும் மேல் உள்ளது என்று பாஜக கூறி வருகிறது. இங்கே வெல்லும் பட்சத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும்.

பாஜக
அதோடு கட்சி ரீதியான சர்வேக்களில் பாஜகவை சேர்ந்த அந்த பெண் நிர்வாகிக்கு இங்கே கொஞ்சம் செல்வாக்கு இருப்பதாகவும் ரிப்போர்ட் வந்துள்ளதாம். இதனால் அவரையே களமிறக்க பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம். ஆனால் இதற்கு அதிமுக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிமுக பாஜகவை போட்டியிட விட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பாஜக தனித்து போட்டியிட கூட வாய்ப்பு உள்ளது. பாஜக கொங்கு மண்டலத்தை முக்கியமாக நம்பி வருவதால் தனித்து போட்டியிடுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications