"விஜயகாந்த்".. இந்தியாவிலேயே ஈரோட்டில்தானாம்.. ஆசையாக இறங்கிய தேமுதிக.. டெபாசிட்டே காலி.. போச்சே!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக கட்சி பின்னடைவை சந்தித்து உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தேமுதிக மிக மோசமாக பின்னடைவை சந்தித்து உள்ளதோடு டெபாசிட்டையும் இழந்து உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. . ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். தேமுதிக சார்பாக ஆனந்த் இங்கே வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

பின்னடைவு
தற்போது ஆனந்த் இங்கே 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 104907 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 41666 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 7986 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக இதன் மூலம் ஈரோடு கிழக்கில் டெபாசிட் இழந்துள்ளது. தேமுதிக தமிழ்நாடு அரசியலில் பெரிய வாக்கு வங்கியை கொண்டு இருக்கவில்லை என்றாலும் ஈரோடு கிழக்கில் தேமுதிகவுக்கு என்று பெரிய வாக்கு வங்கி இருந்தது . ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு முன்பே தேமுதிக வென்றுள்ளதால் இந்த தேர்தலில் அதன் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பொய்யாக்கி தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது.

தேமுதிக
ஈரோடு கிழக்கு தேர்தலில் என்ன நடந்தாலும் போட்டியிடலாம் என்று தேமுதிக முடிவு செய்தது தைரியமாக களமிறங்கியது. ஆனால் தற்போது தற்போது தேமுதிக டெபாசிட் இழந்து உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்ற தேமுதிகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவிலேயே ஈரோட்டில்தான் அதிக விஜயகாந்த் ரசிகர்கள் இருந்தனர். சந்திரகுமார் அங்கு தேமுதிக சார்பாக ஜொலிக்க கூடிய நபராக இருந்தார். இந்த நிலையில் இப்போதும் நாங்கள் பெரிய ஆள்தான். விஜய்காந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் நாங்கள் பெரிய ஆள்தான். எங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது என்று காட்டுவதற்காக தேமுதிக இப்படி தனித்து போட்டியிட நினைத்து இருக்கலாம். யாரையும் அணுகாமல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம்தானே. தேமுதிகவுக்கு கொங்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் நல்ல வாக்குகள் உள்ளன. அங்கெல்லாம் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

எழுச்சி
இந்த தேர்தலில் தேமுதிக எழுச்சியாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ள நினைக்கிறது, என்று குறிப்பிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தேமுதிக சார்பாக செங்குந்த முதலியார்கள் நிறுத்தப்பட்டதால் கொஞ்சமேனும் அந்த கட்சி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியின் படுதோல்வி.. எங்கே தேமுதிக தமிழ்நாடு அரசியலில் இருந்து காணாமல் போகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications