Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல் மேஜிக்? மநீம உள்ளே வந்ததும் மேலும் உயர்ந்ததா வாக்கு வித்தியாசம்? திமுக + காங் குஷி!

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு; ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்த நிலையில், அங்கே காங்கிரஸ் தரப்பு மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 23320 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 8124 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 1498 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 209 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் இருந்தே திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர். முக்கியமாக விக்ரம் வெற்றி இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

நெருக்கம்

நெருக்கம்

அந்த படத்தின் பாடலிலேயே ஒன்றியத்தின் தப்பாலே என்று திமுகவின் ஒன்றிய அஸ்திரத்தை கமல் எடுத்தது அவர் திமுக பக்கம் சாய்கிறாரோ என்ற கேள்வியை உருவாக்கியது. 2021 பிரச்சாரத்தில் திமுக மீது குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை பட்டும்படாமல் வைத்த அதே கமல்ஹாசன்தான் பின்னர் உதயநிதியுடன் மிகவும் நட்பானார். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமானார். கடந்த சில நாட்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும், என்றார்.

முடிவு ஏன்?

முடிவு ஏன்?

இந்த நிலையில்தான் மய்யம் என்ற கொள்கை எல்லையை தாண்டி வலது அல்லது இடதுசாரியுடன் இணையலாம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அதன்படியே மய்யம் என்பதை தாண்டி காங்கிரஸ் - திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்துள்ளார். பாஜக என்ற அசாத்திய பலம் கொண்ட கட்சியை எதிர்ப்பதற்காக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கமல்ஹாசன் வருகையால் திமுக - காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் புதிய உச்சம் தொட்டு உள்ளது. ஈரோடு கிழக்கில் கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம் பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம் பெற்றார். நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம் பெற்றார்.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வென்றது. தற்போது 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும் சூழ்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உள்ளது. கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 10005. இந்த வாக்குகள் அப்படியே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறை சிதறிய இந்த வாக்குகள் அப்படியே காங்கிரஸ் - திமுக பக்கம் சென்றுள்ளது. அதாவது மக்கள் நீதி மய்யம் வருகையால் திமுக - காங்கிரசின் வாக்கு சதவிகிதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கில் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தில் அதிமுகவை கடுமையாக தாக்கினார். அதில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருக்கிறது. எங்களுக்குள் இன்னொரு உறவும் இருக்கிறது. அவர் பெரியாரின் பேரன். நானும் பெரியாரின் பேரன்தான். இந்த தேசம் என்பது சின்னம், கொடி , கட்சி என்று அனைத்தையும் தாண்டியது. எனக்கும் பெரியாருக்கும் விட்டுப்போன உறவை இங்கே நான் மீட்டு எடுக்கிறேன். நான் அரசியலுக்கு சுய லாபத்திற்காக வரவில்லை. மக்களுக்காக வந்து இருக்கிறேன். அதனால் இப்போது இங்கே நிற்கிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் சிலர். ஆனால் நம் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்வது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கடமை. ஒரு இந்தியனாக எனக்கும் அதுதான் கடமை. கட்சிக்காக வாக்களிப்பதை விட அறத்திற்காக வாக்களிக்க வேண்டும். . ஈஸ்ட் இந்தியா கம்பெனி முடிந்து விட்டது. இப்போது நார்த் இந்தியா கம்பெனி வந்து இருக்கிறது. இந்த நாட்டிற்கு ஆபத்து என்று வந்துவிட்டால் அரசியல் கொள்கை எல்லாம் பார்க்காமல் ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் இங்கே இருக்கிறேன். விஸ்வரூபம் படம் வந்த போது என்னை சிலர் தடுமாற வைத்தனர். என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். கலைஞர்தான் என்னை தொடர்பு கொண்டார். என்னிடம் உதவி வேண்டுமா என்று கேட்டார். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. இது தேசத்தின் பிரச்சனை இல்லை. அதனால் உதவி வேண்டாம் என்று கூறிவிட்டேன். இப்போதும் கூட உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா, நான் இருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார். அரசியல் கடந்து நாம் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம் இது என்று கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+