ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்தா? சத்யபிரதா சாகுவுடன் இந்திய தேர்தல் ஆணையம் பரபர ஆலோசனை!என்னாச்சு?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களுக்கு பணம், குக்கர் வழங்குவதாக வீடியோக்கள் வெளியாகின.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஏராளமான புகார்கள் சென்றன. இந்நிலையில் தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய் காணொலி மூலம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் ரத்து செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கூட்டத்தில் விவாதித்தது என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த மாதம் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறார். மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக-காங்கிரஸ் தீவிர பிரசாரம்

திமுக-காங்கிரஸ் தீவிர பிரசாரம்

2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் என்பது திமுகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 21 மாத ஆட்சியில் திமுக ஆட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக, தேமுதிக, நாம் தமிழர்

அதிமுக, தேமுதிக, நாம் தமிழர்

இதுஒருபுறம் இருக்க அதிமுகவில் நிலவிய குழப்பத்துக்கு மத்தியில் இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உள்ளது. எப்படியாவது தென்னரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பெரும் பட்டாளமே ஈரோடு கிழக்கில் களமிறங்கி வாக்கு சேகரித்து வருகிறது. இதேபோல் தேமுதிக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேச்சைகளும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஓட்டு சேகரித்து வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

 பணம்பட்டுவாடா, பரிசு பொருட்கள்

பணம்பட்டுவாடா, பரிசு பொருட்கள்

இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுமக்களுக்கு பணம், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

 இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஈரோடு தேர்தல் அதிகாரியான கிருஷ்ணன் உன்னி, தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு எந்திரங்களின் இருப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்பட தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தேர்தல் ரத்தா?

தேர்தல் ரத்தா?

மேலும் பணவிநியோகம், பரிசுப்பொருள் விநியோகம் தொடர்பாக எழுந்த புகார்கள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுவரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக 110 புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திடீர் ஆலோசனை கூட்டம் என்பது ஈரோடு கிழக்கு தேர்தல் ரத்தாகுமா? என்ற கேள்வியையும் எழுப்பப்பட்டது. இதுபற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+