சுத்து போட்ட ஐ.டி அதிகாரிகள்.. எடப்பாடி பழனிசாமி உறவினர் நிறுவனங்களில் 3வது நாளாக தொடரும் ரெய்டு!
ஈரோடு: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் ஐ.டி. ரெய்டு 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனங்கள், ஆலை, வீடுகள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பூந்துறை சாலை செட்டிபாளையத்தில் தொழிலதிபரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான என்.ஆர். கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் ராமலிங்கம் நடத்தி வருகிறார்.
கட்டுமான நிறுவன அதிபர் என்.ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும், பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் இளைய மகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சுப்பிரமணியம் வீட்டில் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது மகனுக்கு பெண் எடுத்துள்ளார்.
ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனம் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ராமலிங்கத்தின் நிறுவனத்தில் சொத்து மதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ராமலிங்கத்தின் நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்ஆர் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, அவல்பூந்துறை பகுதியில் உள்ள ராமலிங்கம் வீட்டிலும், பூந்துறை சாலையில் உள்ள என்ஆர் திருமண மண்டபத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ராமலிங்கத்தின் நிறுவனத்துடன் அதிக வரவு செலவில் ஈடுபட்ட ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஆர்பிபி கட்டுமான நிறுவனத்திலும், நவநாயக்கன்பாளையத்தில் உள்ள செல்வ சுந்தரத்தின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி பகுதியில் உள்ள ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் செயல்படும் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கட்டுமான நிறுவனர் ராமலிங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், திருமண மண்டபங்கள், ஆர்பிபி நிறுவனம், வீடு, மரவள்ளி கிழங்கு ஆலை ஆகியவற்றில் நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் இன்று 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை முடிந்த பிறகே இந்த ரெய்டில் ஏதேனும், முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது பற்றி தெரிய வரும். இந்த ரெய்டு, அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications