எதிர்பாராமல் நடந்துவிட்டது.. ஸ்ட்ரெச்சர் இன்றி தாயை தூக்கி சென்ற மகள்! ஈரோடு சுகாதாரத்துறை விளக்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ‛ஸ்ட்ரெச்சர்' வழங்கப்படவில்லை என்பதால் காலில் அடிபட்ட மூதாட்டியை அவரது மகளே தூக்கி சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மருத்துவமனை சூப்பிரண்டு, ஆர்எம்ஓவிடம் ‛மெமோ' அனுப்பி விளக்கம் பெறப்பட்டுள்ள நிலையில் அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சொர்ணா. இவர் நேற்று வேலை நிமித்தமாக சாலையில் நடந்து சென்றார். இந்த வேளையில் அவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. சொர்ணா காலில் படுகாயமடைந்தார்.

இதுபற்றி சொர்ணாவின் மகள் வளர்மதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வளர்மதி சம்பவ இடத்துக்கு சென்ற தாய் சொர்ணாவை ஆட்டோவில் மீட்டு ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோ நின்றது. சொர்ணாவின் காலில் அடிபட்டதால் அவரால் நடக்க முடியவில்லை. இதனால் மகள் வளர்மதி ‛ஸ்ட்ரெச்சர்’ கேட்டார். ஆனால், அவருக்கு ஸ்ட்ரெச்சர் வழங்கப்படவில்லை. அதோடு ‛ஸ்ட்ரெச்சருக்காக வளர்மதி அலைக்கழிக்கப்பட்டார்.
இதற்கிடையே சொர்ணா வலியால் துடிதுடித்துள்ளார். இதையடுத்த வளர்மதி வேறு வழியின்றி தனது தாயை தூக்கி கொண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் காலில் அடிப்பட்ட சொர்ணாவை மகள் வளர்மதி தூக்கி சென்றதை அங்கிருந்தவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கூட இல்லையா?, மக்களின் உயிரோடு மருத்துவமனை நிர்வாகம் விளையாடுகிறதா? என கடுமையான கேள்விகள் எழுப்பி விமர்சனம் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. மருத்துவமனை சூப்பிரண்டு மற்றும் ஆர்எம்ஓக்கு மெமோ அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் அளித்த விளக்கம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுகாதார இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர், ‛‛கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் கூட்டமாக இருந்த சூழலில் எதிர்பாராமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மருத்துவமனை சூப்பிரண்டு, ஆர்எம்ஓவிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பணியில் இருந்த டாக்டர்கள், பணியாளர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது’’ என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications