அங்கயே எடப்பாடி ‘அவுட்’.. அண்ணாமலை வராம இருந்திருந்தா எக்ஸ்ட்ரா 10 ஆயிரம் ஓட்டு.. பற்ற வைத்த கேசிபி!
எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்திலேயே அவுட் ஆகி விட்டார் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது பலத்தைக் காட்டுவதற்காக இறங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு படுதோல்வியே பரிசாகக் கிடைத்துள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணாமலை பிரச்சாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக விழுந்திருக்கும் என்றும் விமர்சித்துள்ளார் கேசிபி.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்குவாரா என்றே அதிமுகவினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஒருவழியாக 10வது சுற்றில் டெபாசிட்டை உறுதி செய்தார் தென்னரசு.
ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்வையைத் தொடர்ந்து, ஓபிஎஸ், சசிகலா தரப்பு ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமியும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடியுள்ளார்.

அமோக வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து நேற்று நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தென்னரசுவுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் சுமார் 66 ஆயிரம் வாக்குகள்.

தொடர் தோல்வி
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, "ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவமாக இருக்கும். அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் வரலாறு காணாத தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் அதிமுக தோல்வியை சந்தித்தாலும் அதற்கு அடுத்த தேர்தலிலேயே வெற்றியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது அதிமுக.

எடப்பாடிக்கு சாதகமாக நடந்தது
தற்போது நடைபெற்ற இந்த தேர்தலில் பலமான சாதகமான அம்சங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. மேற்கு மண்டலம் அதிமுகவிற்கு எப்பொழுதும் வலுவான மண்டலம், இடையே நடைபெற்ற பொதுக்குழு சார்ந்த நீதிமன்ற வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக தேர்தல்களில் திமுக அதிமுக நேரடியாக போட்டியிடும்போது அந்த களம் சூடாக இருக்கும், ஆனால் தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்திலும் அதனை எதிர்த்து திமுக இல்லாமல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நின்றது.

முதல் பிரச்சாரத்திலேயே அவுட்
இந்த 22 மாத திமுக ஆட்சியில் குறைந்த காலத்தில் அதிக அதிருப்தியை சம்பாதித்த அரசாக திமுக அரசு உள்ளது. இதனால் அதிமுகவுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என்கின்ற இரண்டு சுயநலவாதிகளால் இந்த இயக்கம் சிக்குண்டு கிடைக்கிறது. பாஜக நாட்டாமை செய்வதால் இந்த இயக்கம் சிக்கல்களைச் சந்தித்துள்ளது. மேலும் அதிமுக தோற்றதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் திமுக கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் முதல் பிரச்சாரத்திலேயே அவர் அவுட் ஆகிவிட்டார்.

இரு பக்கமும் அடி
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது மீசை வைத்த ஆம்பளையா? வேட்டி கட்டிய ஆம்பளையா என்றார். அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதா என்ன மீசை வைத்திருந்தாரா? வேட்டி கட்டி இருந்தாரா? எடப்பாடி பழனிசாமியிடம் சிறப்பாக பேசும் திறமை எதுவும் இல்லை. அதிமுகவின் பலவீனத்தினால் திமுக வென்றுள்ளது. பாஜக என்கிற மதவாத சக்தி தமிழ்நாட்டை ஆளத் துடிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு திராவிடம் என்ற யுத்தியை ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார். அதிமுக, பாஜகவாலும் பாதிக்கப்படுகிறது திமுகவாலும் பாதிக்கப்படுகிறது.

அண்ணாமலை வராமல் இருந்திருந்தால்
அதிமுகவில் நிலவிய உக்கட்சி பிரச்சனை, குறிப்பாக அண்ணாமலை செய்த பஞ்சாயத்து, மக்கள் மனதில் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. இப்போது கூட அதிமுகவில் ஒற்றுமை இல்லை என அண்ணாமலை கூறி இருக்கிறார். அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலை யார்? பாஜகவிற்கு அதிமுக அடிமைப்பட்டு விட்டது. அதிமுகவை பாஜக அழிக்கிறது. சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களில் பஞ்சாயத்து செய்தார்கள். அண்ணாமலை பிரச்சாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் கூட இன்னும் அதிமுகவுக்கு பத்தாயிரம் ஓட்டு சேர்த்து கிடைத்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications