மெழுகுவர்த்தி எரிந்து உருக்குலைந்து போவது போல திமுக ஆட்சியும் போகும்.. அண்ணாமலை அட்டாக்
மெழுகுவர்த்தி போல உங்க(திமுக) ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறினார்.
ஈரோடு: மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்துவிடும். அதேபோலத்தான் உங்க (திமுக) ஆட்சி. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறினார்.
ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனால்
இந்தியாவில் ஒரு ஈகோசிஸ்டம் உள்ளது. ஜே.என்.யூ ஈகோ சிஸ்டம், ஜந்தர் மந்தர் ஈகோ சிஸ்டம். எங்கேயாவது அரியானாவில் ஒரு நாய் செத்துப் போயிருக்கும். பிஜேபி ஆட்சியில் இருக்கும். உடனே கனிமொழி மெழுகுவர்த்தியுடன் வருவார்கள். உத்தர பிரதேசத்தில் ஒரு குரங்கிற்கு வயிறு சரி இல்லாமல் போயிருக்கும். அந்த குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனதற்கு யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று மெழுகுவர்த்தியை தூக்கிக் கொண்டு குறுக்கவும் மறுக்கவும் ஓடுவார்கள். இன்றைக்கு அந்த கும்பல் எங்கே சென்றது.

மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி
மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்துவிடும். அதேபோலத்தான் உங்க (திமுக) ஆட்சி. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது. அது உங்களை உணர்த்துவதற்காகத்தான். மெழுகுவர்த்தி எப்படி எரிந்து உருக்குலைந்துபோகிறதோ அதேபோல்தான் உங்கள் ஆட்சியும். உங்கள் ஆணவம் இப்போது தலைவிரித்து ஆடினாலும் கூட அதற்கும் நேரமும் காலமும் இருக்கத்தான் செய்கிறது.

தமிழகத்தில் இருந்து தான் உருவாகிறது
2024-ல் முழுமையாக எரிகிறதா? 2026-ல் முழுமையாக எரிகிறதா என்பதை காலமும் அரசும் ஜனாதிபதியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் இப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு பிரச்சினை சென்று கொண்டிருந்தால் எப்படி அரசை நடத்துவீர்கள். இந்திய அளவில் பேசப்படுகிற ஒரு பிரச்சினை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தமிழகத்தில் இருந்து தான் உருவாகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆடுபட்டி போல மனிதர்கள் பட்டி உள்ளது. ஒரு பூத்திற்கு 100 பேரை அடைத்து வைத்துள்ளனர்.

முதல்வருக்கு வெட்கமாக இல்லையா?
238 பூத்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளது. 238 பட்டிகள் போடப்பட்டுள்ளது. அந்த பட்டிகளுக்குள் நம்மை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் யாரும் அவர்களை பார்த்து பிரசாரம் செய்யக்கூடாது என ஒரு நாளைக்கு ஆயிரம் கொடுத்து இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள். பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் கூட இப்படி மனிதப்பட்டிகள் கிடையாது. கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள். வெட்கமாக இல்லையா? இப்படி எலக்ஷெனை ஜெயிக்கனுமா? முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? இப்படி ஜெயித்து என்ன செய்ய போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications