அடங்காத மனைவி.. விடிய விடிய காதலனுடன் அரட்டை.. ஆவேசமான கணவர்.. அடுத்து நடந்த அதிரடி அட்டாக்!
பேஸ்புக் காதலனுடன் விடிய விடிய பேசியதால் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார் கணவன்
ஈரோடு: விடிய விடிய அடங்காத மனைவி, ஃபேஸ்புக் காதலனுடன் சாட்டிங் செய்வதை பார்த்த கணவர் ஆவேசமாகிவிட்டார்.. பொறுமை இழந்த கணவர், மனைவியை இழுத்து பிடித்து மொட்டையும் அடித்து வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார். இந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.. இவரது மனைவி லோகநாயகி.. கல்யாணம் ஆகி 17 வருஷம் ஆகிறது.. 16 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில வருஷங்களாகவே லோகநாயகி ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி வந்துள்ளார்.. அப்படி அறிமுகமானவர்தான் சண்முகையா.

தட்சிணாமூர்த்தி
இவரும் ஈரோட்டை சேர்ந்தவர்தான்.. எந்நேரமும் இவருடன் சாட்டிங் செய்தபடியே இருந்திருக்கிறார் லோகநாயகி. இந்த விஷயம் தட்சிணாமூர்த்தி தெரியவந்தது.. ஆனால் லோகநாயகி அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. அழகா இருந்தால் அப்படிதான் போன் பண்ணி பேசுவாங்க என்று கணவனுக்கு பதிலடி தந்துள்ளார்.

லோகநாயகி
ஒரு கட்டத்தில் இந்த அக்கிரமத்தை தாங்கவே முடியாத தட்சிணாமூர்த்தி, லோகநாயகியை இழுத்து கொண்டு போய் தோட்டத்தில் வீட்டில் வைத்து அடைத்துவிட்டார்.. ஒரு சலூன் கடைக்காரரை கூட்டிவந்து லோகநாயகிக்கு மொட்டையும் போட்டார்.. இறுதியில் அந்த வீட்டிலேயே லோகநாயகியை வைத்து பூட்டியும் விட்டார்.

ஃபேஸ்புக்
அப்போதும், ஃபேஸ்புக்கில் ஒருசிலரை தொடர்புகொண்டு உதவி கேட்டதன் மூலம், இந்த விஷயம் சமூக நலத்துறைஅதிகாரிக்கு தெரியவந்துள்ளது.. அவர்கள் லோகநாயகியை மீட்டு ஒரு வேனில் அழைத்து வந்தனர்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தட்சிணாமூர்த்தி அந்த வேனை நடுவழியில் வழிமறித்து தகராறு செய்தார்.

கலெக்டர் ஆபீஸ்
எனினும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு லோகநாயகியை பத்திரமாக அழைத்து சென்றனர்.. அங்கு வைத்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது... ஃபேஸ்புக் பைத்தியம் பிடித்துவிட்டதால்தான் மொட்டை அடைத்தேன் என்று தட்சிணாமூர்த்தி சொல்ல, பூட்டி வைத்து கொடுமைப்படுத்தும் சைக்கோ கணவருடன் வாழ முடியாது என்று லோகநாயகி சொல்ல... தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications