ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பொண்ணு வேணும்" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்

புகாரை வாங்க மறுப்பதாக லாட்ஜ் ஓனர் நிர்மலா குற்றஞ்சாட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    புகாரை வாங்க மறுக்கும் போலீசார்.. லாட்ஜ் ஓனர் நிர்மலா குற்றச்சாட்டு-வீடியோ

    கோபி: பொண்ணு வேணும்னு என்கிட்ட கேட்ட மாஜி எம்பியின் கணவர் மீது புகார் தர வந்தேன்.. ஆனா ஒருத்தரும் புகாரை வாங்க மறுக்கறாங்க.. இது என்ன போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா?" என்று லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன் வீதியை சேர்ந்த தம்பதி சாமுவேல் - நிர்மலா. நிர்மலாவுக்கு 45 வயதாகிறது. இவர் கோபியில் கடந்த 12 வருடங்களாக லாட்ஜ் ஒன்றினை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நிர்மலா வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் வந்துள்ளது. முன்னாள் திருப்பூர் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு பேசினார். தான் ரூமில் ஜாலியாக இருக்க பெண் வேண்டும் என கூறி நிர்மலாவை மிரட்டியும் உள்ளதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக இருவர் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வயிறு எரியுதுங்க.. யாருமே உதவல.. இன்னொரு சுபஸ்ரீ உயிர் பறிபோயிட கூடாது.. கொதிக்கும் மக்கள்!வயிறு எரியுதுங்க.. யாருமே உதவல.. இன்னொரு சுபஸ்ரீ உயிர் பறிபோயிட கூடாது.. கொதிக்கும் மக்கள்!

    மிரட்டல்

    மிரட்டல்

    அந்த ஆடியோவில் "உங்ககிட்டே கேட்க கூடாது தான். நானும் நீங்களும் எவ்வளவு பிரெண்டுனு உங்களுக்கே தெரியும். உங்க லாட்ஜ்-ல என்ன நடக்குதுனு உங்களுக்கே தெரியும். எனக்கு ஒரு பொண்ணு வேணும்" என்று வாசு மிரட்டி இருந்தது பதிவாகி இருந்தது. இந்த மிரட்டல் ஆடியோ குறித்து போலீசில் புகார் தந்திருப்பதாகவும் நிர்மலா தரப்பில் கூறப்பட்டது.

    தீக்குளிப்பேன்

    தீக்குளிப்பேன்

    இந்நிலையில், வாசு மீதான புகாரை வாங்க மறுப்பதாகவும், போலீசார் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் நிர்மலா குற்றஞ்சாட்டி உள்ளார். கோபி போலீஸ் ஸ்டேஷன் வாசலில், இதனை கண்டித்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் லாட்ஜ் ஓனர் நிர்மலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    இதுகுறித்து நிர்மலா பேசும்போது, "சிஎஸ்ஆர் காப்பி குடுங்க.. 50 ரவுடிங்க வந்து என்னை மிரட்டறாங்கன்னு சொன்னேன். எதுக்கு சிஎஸ்ஆர் காப்பி.. நாக்கு வழிக்கிறதுக்கா..ன்னு ஒரு இன்ஸ்பெக்டர் கேட்கலாமா? பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னா போலீஸ்தானே பாதுகாப்பு தரணும்? இவங்களே இப்படி கேட்கலாமா?

    புரோக்கர் ஆபீஸ்

    புரோக்கர் ஆபீஸ்

    ஒரு பிரச்சனைன்னா, போலீஸ்லதானே புகார் தரணும்? இதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனே இல்லை சார்.. புரோக்கர் ஆபீஸ்.. பணம் தரணும்.. எவ்வளவு நாள்தான் பொறுமையா இருக்கிறது? இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கணும்.. இல்லேன்னா இந்த ஸ்டேஷன் வாசல்லயே நான் தீக்குளிப்பேன்" என்றார் ஆவேசமாக.

    English summary
    Gopichettipalayam Lodge Owner Nirmala complaint against Police and AIADMK EX MPs husband Vasu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X